பக்கம்:மூவரை வென்றான்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மூவரை வென்றான்/பெரிய...


ஜமீன்தாரிடமிருந்து அழைப்பு வந்ததும் தெய்வச் சிலையார் அதனை ஏற்றுக்கொண்டு சந்திக்கச் சென்றதும் பரமரகசியமாய் நடந்தன. சந்திக்க உத்தர விட்டவரையும் சந்திக்கச் சென்றவரையும் தவிர வேறு எவருக்கும் தெரியாது.

“சமூகத்தில் கூப்பிட்டு அனுப்பினீர்களாமே? இதோ வந்திருக்கிறேன்”-தெய்வச் சிலையார் ஜமீன்தாருக்கு முன் சென்று அவரை வணங்கிவிட்டு அடக்க ஒடுக்கமாக இப்படிக் கேட்டார். ஜமீன்தார் பதில் வணக்கம் செய்யவில்லை. தமக்கு முன் அடக்க ஒடுக்கமாக வணங்கி நின்ற அந்த முது பெரும் வீரரை அலட்சியமும் கடுகடுப்பும் தோன்ற ஏறிட்டுப் பார்த்தார்.

“நீங்கள்தான் தீவட்டிக் கொள்ளைக்காரர்களை அடக்கக் கிளம்பியிருக்கும் சூரப் புலியோ! ஜனங்களைக் கூடத் தயார் செய்கிறீர்களாமே?”

“தாங்களும் தங்கள் ஜமீன் அதிகாரமும் செய்ய முடியாத அல்லது செய்ய விரும்பாத காரியத்தை என் போன்ற தொண்டனும் ஜனங்களுமாவது செய்ய முயல்கிறோம். இதற்காக எங்களை வாழ்த்திப் பாராட்டவேண்டிய திருக்கத் தாங்கள் ஆத்திரப்படுவதின் அர்த்தம் விளங்கவில்லை” -தெய்வச் சிலையர் சற்று அமுத்தலாகவே பதில் கூறினார்.

“என் தகப்பனார் காலத்திலிருந்து இந்த அரண்மனை உப்பைத் தின்று வளர்ந்திருக்கிறீர்கள். இதற்குச் செலுத்த வேண்டிய நன்றியைக் கேட்கிறேன். இந்தக் கொள்ளைக் காரர்களைப் பிடிக்கும் முயற்சியில் நீங்கள் தலையிடுவதை இப்பேர்தே நிறுத்திவிட வேண்டும்...”

“அரண்மனைக்கு நான் செலுத்த வேண்டிய நன்றிக்கும். கொள்ளைக்காரர்களைப் பிடிப்பதற்கும் என்ன சம்பந்தம்? பார்க்கப்போனால் நீங்கள் பட்டத்துக்கு வந்ததிலிருந்து “ஜமீன் கிராமங்களுக்கு இடைவிடாமல் தொல்லை கொடுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/30&oldid=507771" இலிருந்து மீள்விக்கப்பட்டது