பக்கம்:மூவரை வென்றான்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

29


கும் இந்தக் கொள்ளைக்காரர்களை நான் பிடிக்க முயல்கிறேனே! அதுவே உங்களுக்கு நான் செலுத்தும் பெரிய நன்றி, அல்லவா?”

“தெய்வச்சிலைத் தேவரே! எனக்கு உம்மோடு அதிகம் பேசிக்கொண்டிருக்க நேரம் இல்லை. நான் பட்டத்துக்கு வந்ததிலிருந்து நீங்கள் பலவிதத்தில் என்ன்ோடு ஒத்துழைக்க மறுக்கிறீர்கள். உங்களுக்கு வயது ஐம்பதுக்கு மேல் ஆகி விட்டது. வயதுக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தைத் தேடிக்கொள்ள வேண்டாம். அவ்வளவு தான் இப்போது என்னால் எச்சரிக்க முடியும்.”

“என் உயிரைவிட மங்கலக்குறிஞ்சி. மக்களின் வாழ்வு பெரிது. காளான் முளைத்தது போல் முளைத்து ஜமீன் கிராமங்களைச் சூறையாடிக்கொண்டிருக்கும் பெரிய மாயன் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்காமல் போனால் என். பெயர் தெய்வச்சிலைத் தேவர் இல்லை. எனக்குத்தான் வயசாகி விட்டது என் தைரியத்துக்கு இன்னும் வயசாகவில்லை.”

“நான் சொல்கிறேன்: நீர் இதைச் செய்யக்கூடாது. நான் ஜமீன்தார்; நீர் எனது பிரஜை; என் கட்டளையை மீறி விடுகிற அளவுக்கு உமக்குத் துணிவு வந்துவிட்டதா?”

“நேற்று வரை அவ்வளவு துணிவு இல்லை! இன்று இங்கே, இப்போது இளைய ஜமீன்தாரின் பேச்சைக் கேட்டதும்தான் அந்தத் துணிவும் வந்துவிட்டது...”

“என்ன? உமக்கு அவ்வளவு திமிரா?” “அது என்னிடமில்லை ஜமீன்தார்வாளிடம்தான் இப்போது உற்பத்தி ஆகிக்கொண்டிருக்கிறாற் போலத் தோன்றுகிறது -”

தெய்வச் சிலையார் பயத்தையும் பக்தியையும் அறவே விட்டு விட்டார். கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டிருந்த ஜமீன்தாரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/31&oldid=507746" இலிருந்து மீள்விக்கப்பட்டது