பக்கம்:மூவரை வென்றான்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

31


“இல்லையானால். என்ன செய்துவிடுகிறீர்கள்?” - ஜமீன் கட்டிடமே கிடுகிடுத்துப் போகும்படியான இரைந்த குரலில் கேட்டார் தேவர்.

“செய்வதென்ன? இந்தத் தடியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கையில் தடிகளும் இருக்கின்றன. இவர்களுக்கு நடுவில் நீங்களும் இருக்கிறீர்கள். உங்களை என்ன செய்ய வேண்டுமென்று இவர்களுக்குக் கட்டளையிட நானும் இருக் கிறேன். இத்தனைக்கும் மேலாக வாசற்கதவு அடைத்திருக்கிறது...” ஜமீன்தார் விஷமத்தனமாகப் பேசினார். விஷமத்தனமாகச் சிரித்தார்.

“என் கையில் தெம்பும் இருக்கிறது. அதையும் மறந்துவிட வேண்டாம்!” - தேவர் சீறினார்.

“தேவரே! வீணாகத் துள்ள வேண்டாம். இப்பொழுது நீர் ஒரு செத்த பாம்பு; முடியுமானால் உம்முடைய தெம்பைக் காட்டிப் பார்க்கலாமே?”

“என் தெம்பைக் காட்டுவதற்கு ஜமீன்தார்வாளின் உத்தரவு எனக்குத் தேவை இல்லை” - இப்படிச் சொல்லிக் கொண்டே ஜமீன்தார்மேல் பாய்ந்தார் தெய்வச்சிலையார்.

அந்தப் பாய்ச்சல் மின்னல் வெட்டும் வேகத்தில் நடந்து விட்டது. மறுகணம் தேவர் கைப் பிச்சுவாவின் நுனி ஜமீன் தாரின் கழுத்துக்கருகே வருடிக்கொண்டிருந்தது. தடியும் கையுமாக நின்று கொண்டிருந்த முரடர்கள். “ஆ! என்ன துணிச்சல்” என்று. அலறிக்கொண்டே தேவர்மேல் பாய்ந்தனர். தேவர் கூச்சல் கேட்டார் :

“அப்படியே நில்லுங்கள்! உங்களில் யாராவது கொஞ்சம் அசைந்தாலும் போதும். இந்தக் கத்தியை இப்படியே ஜமீன்தாரின் நெஞ்சுக் குழியில் சொருகிவிடுவேன். ஜமீன்தார். பிழைக்கவேண்டுமானால் நீங்கள் அசையாதீர்கள்...”

ஜமீன்தாரின் முகம் வெளிறியது. கண் விழிகள் மிரண்டு பிதுங்கின. உடல் வெடவெடவென்று நடுங்கிற்று. தடியுடன் நின்றவர்கள் ஆடாமல் அசையாமல் அடித்து வைத்த சிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/33&oldid=507773" இலிருந்து மீள்விக்கப்பட்டது