பக்கம்:மூவரை வென்றான்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

மூவரை வென்றான்/பெரிய...

தான் இருக்கிறது. எப்படியும் இதை உடைக்காமல் விடக்கூடாது கொலையும் கொள்ளையுமாக மங்கலக்குறிஞ்சியை அமங்கலக்குறிஞ்சியாக்கிக் கொண்டிருக்கும் தீவட்டிக் கொள்ளைக்காரன் பெரிய மாயனைக் கண்டுபிடித்துவிட்டால் இந்த ஜமீன்தாரின் புதிர் தெரிந்துவிடும். ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கப் போனால் ஜமீன்தாருக்கும் பெரிய மாயனுக்கும் ஏதோ அந்தரங்கத் தொடர்புகூட இருந்தாலும் இருக்கும். இவ்வாறு சந்தேகப்படுவதற்கு முகாந்திரங்கள் நிறைய இருக்கின்றன.

இளைய ஜமீன்தார் பட்டத்துக்கு வந்த ஓரிரண்டு மாதங்களுக்குப் பின்தான் இந்தத் தீவட்டிக் கொள்ளைக் கூட்டம் மங்கலக்குறிஞ்சியில் அட்டகாசம் புரியத் தொடங்கிற்று. அன்றிலிருந்து ஜமீன்தார் அதை ஒடுக்க முடியவில்லை. என்னைப்போல யாராவது முயன்றாலும் தடுக்கிறார்; பய முறுத்துகிறார். தீவட்டிக் கொள்ளைக்காரர்களும் இதுவரையில் ஜமீன் மாளிகையிலிருந்தோ, ஜமீன் சொத்துக்களிலிருந்தோ, ஒரு சிறு களவுகூடச் செய்ததாகத் தெரியவில்லை. அவர்கள் கொள்ளையடிப்பதெல்லாம் ஊரிலிருந்தும் ஊர் மக்களிடமிருந்தும்தான். தீவ்ட்டிக்கொள்ளை மங்கலக் குறிஞ்சி ஜமீன் எல்லையைச் சேர்ந்த ஊர்களில் மட்டும் நடந்ததே ஒழிய வேறெங்கும் இல்லை. இதை எல்லாம் ஒரு சேர வைத்து மொத்தமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது கண்ணுக்குத் தெரியாத சூழ்ச்சியின் பயங்கர உருவம் ஒன்று மறைந்திருப்பதுபோல் தோன்றுகிறது.

தெய்வச்சிலைத் தேவர் சிந்தித்தார். இப்போது அவருக்கு இரட்டை எதிர்ப்பு. கொள்ளைக்காரப் பெரிய மாயனைக் கண்டுபிடிக்க முயல்வதனால் அவன் எதிர்ப்பு: ஜமீன்தாரிடம் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் அவருடைய மறைமுகமான பயங்கர எதிர்ப்பு. இந்த இரு எதிர்ப்புக்கு இடையேயும் அவரும் அவரது ஆட்களும் தங்கள் முயற்சியை நிறுத்தி விடவில்லை.

அன்று அமாவாசைக்கு முதல் நாள். அம்மாவாசையன்றும், அதற்கு முன் இரண்டு நாட்களும், பின் இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/36&oldid=507797" இலிருந்து மீள்விக்கப்பட்டது