பக்கம்:மூவரை வென்றான்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

மூவரை வென்றான்/பெரிய...


தெய்வச் சிலைத் தேவர் பதுங்கியிருந்த இடம் மற்றெல்லாவற்றையும்விடக் கேந்திரமானது. மலையும் அடிவாரமும் சந்திக்கின்ற இடத்தில் இடிபாடுகளோடு சிதிலமடைந்த ஒரு ஐயனார் கோவில், பழைய காலத்தில் ‘வையந்தொழுவார் கோயில்’ என்று அதற்குப் பெயர். ஐயனார். கோவில்தான். சிதைந்திருந்தது. அரைப்பனை உயரத்துக்குப் பிரம்மாண்டமாக வெள்ளைப் பூச்சுடன் நின்ற ஐயனார் கோவில். குதிரை இன்னும்புத்தம் புதிதுபோல அழியாமல் சிதையாமல் இருந்தது. அடியிலுள்ள துவாரத்தின் வழியாக உள்ளே நுழையலாமானல் குதிரையின் உடலுக்குள் பத்துவேர் தாராளமாகக் கால் நீட்டி உட்காரலாம். அவ்வளவு பெரிது. இந்தக் குதிரையின் கீழ்ப்புறம் மலையிலிருந்து ஊருக்குள் செல்லும் பிரதானமான காட்டுச்சாலை அமைந்திருந்தது. ஐயனார்கோவில் குதிரைக்குக் குடைபிடிப்பது போல அடர்ந்து வளர்ந்த வாகை மரம் ஒன்று நெடிதுயர்ந்து நின்றது.

தெய்வக் சிலைத்தேவர் இந்த வாகை மரத்தின் மேலேறி அடர்ந்து வளர்ந்திருந்த இதன் கிளைகளுக்கு இடையே ஓரிடத்தில் வேல், கம்பு சகிதம் மறைந்து உட்கார்ந்து வேவு பார்த்துக்கொண்டிருந்தார். மரக்கிளையில் அவர் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திலிருந்து காலைக் கீழே: தொங்கவிட்டால் காற்பாதங்கள் ஐயனார் குதிரையின் தலையில் இடிக்கும்.

இரவு முதல் ஜாமம் கழித்துவிட்டது. ஒரு துப்பும் துலங்க வில்லை. நேரம் ஆக மலைக்குளிர் ஊசி குத்துவது போல் ஜில்லென்று உடம்பில் உறைத்தது. கண் இமைகள் மெல்லச் சோர்ந்தன. இனிமேல் இங்குக் காத்திருப்பதில் பயனில்லை. என்று தேவர் எண்ணியபோது வாகை மரத்துப் பொந்தில் கோட்டான் இரண்டு மூன்று முறை தொடர்ந்து கத்தியது: சிறகுகளைப் படபடவென்று அடித்துக்கொண்டது.

கீழே காய்ந்த சரகுகளில் தடதடவென்று யாரோ சிலர் வேகமாக நடந்துவரும் ஒசை அடுத்துக் கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/38&oldid=507799" இலிருந்து மீள்விக்கப்பட்டது