பக்கம்:மூவரை வென்றான்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

37


‘கசமுச’ வென்று பேச்சுக் குரல்களும் கேட்டன. தேவர் உஷாரானார். காதுகளையும் கண்களையும் தீட்டிக் கூர்மையாக்கிக் கொண்டார். மரக்கிளைகளை மெல்ல விலக்கிக் கொண்டு கீழே பார்த்தார். கண்களில் பார்க்கும் சக்தியை எவ்வளவு தீட்சண்யமாக்கிக் கொண்டாலும் கீழே மொத்தமாக ஆட்கள் நிற்பதுமட்டும் தெரிந்ததே தவிர இன்னார், இன்னார் குதிரையின் பக்கத்தில் நிற்கிறார்கள் என்று இனம் புரியவில்லை. கும்பலாகப் பத்துப் பன்னிரண்டுபேர் நிற்பது தெரிந்தது. தோற்றத்திலிருந்து ஒவ்வொரு ஆளும் ஏறக் குறைய ஒரு பீமசேனனுக்குச் சமமாக இருப்பான் போல் தோன்றியது.

    பொறுமையிழந்துவிடாமல் மேலும் கூர்ந்து கவனித்தார், தெய்வச்சிலைத் தேவர்.
    குதிரையின் அடிப்பாகத்தில் இருந்த சிறு துவாரத்தின் வழியே ஓர் ஆள் உள்ளே நுழைந்தான். வெளியே யிருந்தவர்களிடம் எதையோ கொண்டுவந்து கொடுத்தான். ஒருமுறை இரண்டு முறை, மூன்று முறை, குதிரையின் உடலுக்குள்ளிருந்து எவையோ சில பொருள்களை வெளியே எடுத்துவைத்தான் அவன். அவை என்னவென்று இருட்டில் தெரிய வில்லை.
    அடுத்து இரண்டு சிக்கி முக்கிக் கற்களுக்கு இடையே பஞ்சுத் துணுக்கை வைத்துத் தட்டுகிற ஓசை கேட்டது. நெருப்புப் பொறிகள் பஞ்சில் பற்றின. குதிரையின் கீழே இருந்த ஓர் அகல் விளக்தை ஏற்றினர்.
    கும்மிருட்டில் சட்டென்று விளக்கு ஒளி படரவும் தெய்வச்சிலைத் தேவர் வாகை மரக் கிளைகளுக்கிடையே தம்மை நன்றாக மறைத்துக்கொண்டார். பின்பு மேலும் தொடர்ந்து கவனித்தார். அவர் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அந்த நடுங்கும் குளிரிலும்கூட உடம்பு வேர்த்துவிடும் போலிருந்தது.
         மூ --- 3