பக்கம்:மூவரை வென்றான்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

மூவரை வென்றான்/பெரிய...


“காணவில்லையா? என்ன ஆச்சர்யம்: கொள்ளைக்காரர்களிடமே கொள்ளையடிப்பவர்கள் கிளம்பிவிட்டார்களா?”

“எல்லாம் அந்தத் தெய்வச்சிலைக்கிழவன் செய்த வேலை யாகத்தான் இருக்கும், அந்தக் கிழட்டுப்பயல் மட்டும் இப்போது என் கையில் அகப்பட்டால்.. ?” - இப்படிச் சொல்லியவாறே பல்லை நறநறவென்று கடித்துக்கொண்டு முஷ்டியை மடக்கிக் கட்டினான் ஒரு முரடன்.

மரத்தின்மேலிருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்த தெயிவச்சிலையாருக்கு உடல் ஒரு குலுக்குக் குலுக்கி ஓய்ந்தது.

“அது என்னப்பா மரக்கிளை குலுங்குகிறது?”

தெய்வச்சிலையாருக்கு நாக்கு ஒட்டிக்கொண்டது. நெஞ்சு அசுர வேகத்தில் அடித்துக்கொண்டது!

“அட நீ ஒருத்தன்! காற்றுக்கு மரம் ஆடினால் அது ஒரு வேடிக்கையா? இப்பொழுது நாம் புறப்பட வேண்டுமே? அங்கே அவர் குதிரைகளோடு காத்துக்கொண்டிருப்பார். அதற்கு முதலில் வழி சொல்லுங்கள்.”

நல்லவேளை! மரம் ஆடியதைப்பற்றி அதற்குமேல் பேச்சுத் தொடரவில்லை. தேவர் பிழைத்தார்.

சீக்கிரமே வேறு தீவட்டிகள் தயார் செய்துகொண்டு புறப்பட அவர்கள் முடிவுசெய்தனர். ‘உடை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தீவட்டிகளையாவது தயார் செய்து கொண்டு போவோம்’ -என்பது அவர்கள் எண்ணம்போலும், ஒருவன் எண்ணெய் கொண்டுவரப் போனான். இன்னொருவன் கந்தல் துணிகளும் தீ மூட்டுவதற்கு கல்லும் கொண்டுவரப் புறப்பட்டான்.

மூன்றாமவன் தீவட்டிக்கான மரக் கைப்பிடிகளைத் தயார் செய்வதற்காக வெட்டரிவாளும் கையுமாக வாகை மரத்தில் ஏறினான். தேவர் திடுக்கிட்டார். கைவசமிருந்த கறுப்பு அங்கிக்குள் மெல்ல உடலை நுழைத்துக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/48&oldid=507812" இலிருந்து மீள்விக்கப்பட்டது