பக்கம்:மூவரை வென்றான்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

47


கிளைகளிடையே நன்றாக மறைந்துகொண்டார். தம் உடை வெள்ளையாக இருப்பதனால் மரத்தின்மேல் ஏறுபவனுக்குத் தெரிந்துவிடக்கூடாதே என்பத்ற்காகத்தான் அவர் முன் ஜாக்கிரதையாக எடுத்து வைத்துக்கொண்டிருந்த கறுப்பு அங்கியில் மறைந்து கொண்டார்.

அந்தப் பாழாய்ப்போன வாகை மரத்தில் எத்தனையோ கிளைகள் இருந்தன. ஆனால், ஏறியவன் தேவர் உட்கார்ந் திருந்த கிளையை நோக்கியே வந்தான். கிளைக்குத்தான் வந்தான்! தொலைந்துபோகிறது என்றால் அவன் வெட்டிய கொம்பும் தேவர் கை பிடித்துக் கொண்டிருந்தது.”

எந்தக் கொம்பின் கைப்பிடி பலத்தில் தேவர் மரக் கிளையில் பதுங்கியிருந்தாரோ அந்தக் கொம்பின் அடியில் அவனுடைய அரிவாள் சதக் சதக் என்று பாய்ந்துகொண் டிருந்தது. இன்னும் நாலைந்து வெட்டு விழுந்தால் கொம் பேர்டு தேவரும் கீழே விழ வேண்டியதுதான். நல்ல இருட்டு. வந்தது வரட்டுமென்று துணிந்து கிளைமேல் நின்று வெட்டிக்கொண்டிருப்பவனின் வலது காலைத் தமது வலது காலால் வேகமாக இடறிவிட்டார் தேவர்.

அவன் அடுத்த விநாடி, “ஐயையோ! அப்பா மரத்தில் பிசாசு காலை இடறிவிடுகிறதே” என்று அலறிக் கொண்டே நிலைகுலைந்து போய்ப் பொத்தென்று கீழே குதித்தான். அவன் கையிலிருந்த அரிவாள் நழுவி தேவருடைய வலது காவில் சிராய்த்துவிட்டுக் கீழே விழுந்தது.

“பிசாசாவது ஒன்றாவது? எங்கே பார்க்கலாம்! ஏறுங்கடா மரத்திலே” பத்துப் பன்னிரண்டு பேர் மொத்தமாக வாகை மரத்தில் ஏறவும் தேவர் நடுநடுங்கிப் போனார்.

‘உயிர் பிழைக்க வேண்டுமானால் இனிமேல் கீழே குதித்து ஓடுவதைத் தவிர வேறுவழியில்லை’ - என்று அவர் மனத்திலே பட்டுவிட்டது.

அடுத்த கணம் குதிரையின் தலை வழியாகக் கீழே குதித்து மேற்கு நோக்கித் தலை தெறிக்க ஓடத் தொடங்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/49&oldid=507813" இலிருந்து மீள்விக்கப்பட்டது