பக்கம்:மூவரை வென்றான்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

49


வந்தவர்களும் மற்றக் குதிரைகளை மடக்கி ஏறிக்கொண்டு விட்டனர். முன்னால் பெரிய மாயனின் குதிரை.

பின்னால் வரிசையாகத் துரத்துகிறவர்களின் குதிரை நடுவில் தேவர் ஏறிய குதிரை அகப்பட்டுக் கொண்டது. நல்ல இருட்டு ஒருவரிடமும் தீவட்டி இல்லை. எல்லாக் குதிரைகளும் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தன. பின்னால் துரத்தி வந்தவர்களின் கூச்சல் மட்டும் ஒயவில்லை.

ஆயிற்று! இதோ ஒலைப்பாயில் கேழ்வரகு தூவியிருக்கும். இடம் நெருங்கி விட்டது. தேவர் குதிரையிலிருந்து குதித்து விட நினைத்தார், முடியவில்லை. திடீரென்று என்ன நினைத்துக் கொண்டாரோ அந்தக் கறுப்பு அங்கியைத் தம் உடலிலிருந்து உருவி எறிந்துவிட்டார்.

தடதடவென்று ஒலைப்பாயில் குதிரைகள் நடந்தன. அடுத்த கணம் பொத்துப்பொத்தென்று சறுக்கி விழுந்தன. லாடங்களை வழுக்கச் செய்து எழுந்திருக்க முடியாமல் குதிரைகளைச் சறுக்கி வீழ்த்தியது கேழ்வரகு. தேவர் கீழே உருண்டார். குதிரைகள் சில அவருடைய நெஞ்சிலும் மார் பிலும் மாறி மாறி மிதித்துக்கொண்டு சென்றன. அவருக்குப் பிரக்ஞை தவறிவிட்டது. எத்தனை குதிரைகளின் மிதியைத் தான் ஒரு வயதானவர் பொறுக்க முடியும்?

மறுபடி அவருக்குப் பிரக்ஞை வந்தபோது தாம் ஊர்ச் சாவடியில் கிடத்தப்பட்டிருப்பதை உணர்ந்தார். சாவடித். தூண்களில் கொள்ளைக்காரர்கள் வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தனர், முக்கியமான ஆளை மட்டும் காண, வில்லை.

“பெரிய மாயன் எங்கே?”- அவர் ஆவலோடு கேட்டார்.

“இருட்டிலே குதிரைக் காலிலே மிதிபட்டுக் கறுப்பு. முகமூடி அணிந்த ஒரு ஆள் அங்கேயே இறந்திட்டார். இந்தக் கொள்ளைக்காரர்களை விசாரித்ததில் அவர்தான் பெரிய மாயன் என்று சொல்லுகிறார்கள். உங்கள் முதல் விருப்பப்படி அவரை உயிரோடு பிடிக்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/51&oldid=507815" இலிருந்து மீள்விக்கப்பட்டது