பக்கம்:மூவரை வென்றான்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

மூவரை வென்றான்/பெரிய...


இரண்டாவது விருப்பப்படி உங்கள் அனும்தியின்றி முக மூடியைக் கழற்றி ஆளைப்பார்க்கக் கூடாதென்று அங்கேயே போட்டுவிட்டு வந்துவிட்டோம்...”

“உங்கள் ஜமீன்தார் விஜயாலய மருதப்பத்தேவரைச் செத்த பின்பாவது நீங்கள் மன்னிப்பீர்களா? அவருடைய பாவம் பெரியது. மிகவும் பயங்கரமானது. வேலியே பயிரை மேய்ந்து அழித்த பாவம் அது. பொருளாசை யாரைத்தான் விட்டது? இல்லாதவன் ஆசைப்பட்டால் அது இயற்கை. ஆனால் அரசனே கொள்ளைக்காரன் வேஷம் போட்டால் அது எவ்வளவுநாள் பலிக்கும்? பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுத்தானே. ஆகவுேண்டும்?”

“நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லையே-?” -- போங்கள்! போய் முகமூடியைக் கழற்றிப் பாருங்கள். பெரிய மாயன் யார் என்று புரியும் புரிந்து கொண்டபின் ஆச்சரியப்பட்டால்தான் அது உங்கள் தவறு. அவனை அந்த இடத்திலேயே அடக்கம் செய்துவிடுங்கள். அவனுடைய பாவ சரீரம் மறுபடியும் இந்த ஊரெல்லையில் நுழைய வேண்டாம். அந்த இடத்தில் ஐயனார் கோவிலிலிருந்து ஊர்வரை காட்டை அழித்துப் பொட்டலாக்கி விட்டால் கூட நல்லது. இதுதான் தெய்வச்சிலையாருடைய இறுதி வேண்டுகோளாக அமைந்தது. இதன் பிறகு சில நாழிகைகளில் அந்த மகா வீரபுருஷரும் அமர பதவி அடைந்தார். அத்தனை குதிரைகள் மிதித்தும் அதுவரை அவர் உயிர் உடலில் தங்கியிருந்ததே புண்ணிய பலன்தான்.

விஜயாலய மருதப்பத் தேவர்தான் பெரிய மாயன்என்று அறிந்தபோது ஜனங்களுக்கு ஏற்பட்ட அருவருப்பு இவ்வளவென்று சொல்லி முடியாது. காறி உமிழ்ந்தும் கல்லால் எறிந்தும் அந்தப் பெரிய மாயனை அடக்கம் செய்தனர். தேவர் வேண்டுகோளின்படி ஐயனார் கோவிலிலிருந்து ஊர் எல்லைவரை காட்டை அழித்துப் பொட்டலாக்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/52&oldid=507816" இலிருந்து மீள்விக்கப்பட்டது