பக்கம்:மூவரை வென்றான்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

மூவரை வென்றான்/வெள்ளையத்...

மலைக்கு வேட்டையாடப் போகும்போது மதுரையில் என்னைச் சந்தித்து, “சார் நீங்களும் வாருங்களேன். உங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வீவுதானே? கொங்குமலை இயற்கைவளம் மிக்க இடமாம், போய்விட்டு வரலாம்” என்றார். நானும் “சரி” என்று புறப்பட்டு விட்டேன். நாங்கள் இருவரும் சனிக்கிழமை இரவு கபிலக் குறிச்சியை அடைந்து அங்கே எங்களுக்கு வழி விவரங்களைத் தெரிவிப்ப தற்காகவும், துணைக்காகவும் தேடிக்கொண்ட ஆள்தான் இராச்ாமித் தேவர். ஜான்ஸனும் தேவரும் வேட்டைக் காரர்கள், அவர்களுக்கிடையே நான் போவது எனக்கென்னவோ போலிருந்தது. வேட்டையாட வந்திருப்பவர்களோடு நாம் இயற்கை வளத்தை ரசிக்கலாம் என்றெண்ணிக் கொண்டு வந்தது, நம்முடைய பிசகு’ - என்று மலைக்குப் போகும்போது நான் எண்ணினேன். ஏனென்றால், ஜிப்பில் போய்க்கொண்டிருக்கும்போதே எதேதோ வேட்டை சம்மந்தமான விஷயங்களைப் பற்றி நான் ஒருவன் நடுவில் அமர்ந்திருப்பதையே மறந்துவிட்டுத் தமக்குள் சம்பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள் வீராசாமித் தேவரும் ஜான்ஸனும்.

***

ஆறு மணிக்கு மலையிலிருந்து புறப்படுவோம் என்று. எதிர்பார்த்ததற்கு மாறாக, மழை சோனாமாரியாகப் பிடித்துக்கொண்டு விட்டது. மணி ஏழரை ஆகியும் வேகம், குறையவேள் நிற்கவோ இல்லை. “இந்த மழையில் ஜீப் நிச்சயமாகப் போகாது பாதை முழுவதும் ஒரே தன்னி, மயமாக இருக்கும்” - என்று வீராசாமித் தேவர் கூறி விடவே, மழை நின்று பாதையில் தண்ணீர் வடிந்தபிறகே போவது: என்று முடிவு செய்தோம். இருட்டு வேறு, பயங்கரமாகச் சூழ்ந்திருந்தது.

நாலைந்து பேர் தங்குவதற்கு வசதியாக இருந்த மலைக் குகை ஒன்றைக் கண்டுபிடித்தார் தேவர். அதிலே மழை நிற்கிறவரை நாங்கள் தங்கலாம் என்பது அவர் ஏற்பாடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/54&oldid=509512" இலிருந்து மீள்விக்கப்பட்டது