பக்கம்:மூவரை வென்றான்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

மூவரை வென்றான்/வெள்ளையத்...


அருகிற் சென்று பார்த்தேன். ஒரு கையில் ஓங்கிய அரிவாள். மற்றோர் கையில் பாலாக்கம்பு. ஆறடி உயரம், வாட்டசாட்டமான உடல், மதயானை போன்ற தோற்றம், தொலைவிலிருந்து பார்க்கிற எவரும் அந்த உருவத்தைச் சிலை என்று சொன்னால் நம்பமாட்டார்கள். எண்ணெய் வழிந்து வழிந்து கருமை பளபளத்தது அந்தச் சிலையில். கம்பீரமும், பெருமிதமும் தோன்றும் மீசையோடு கூடிய அந்தச் சிலையின் முகத்தோற்றம் காண்பவர்களைச் சற்றே நடுங்கவைக்கா மலிருக்காது. கருப்பன்-என்ற பெயரில் கிராம தேவதை களில் ஒன்றாக விளங்கும் துஷ்டதேவதையின் சிலையைப் போலத்தான் ஏறக்குறைய இந்தச் சிலையும் இருந்தது. ஆனால், இதன் ஆகிருதி பெரிது! இந்தச் சிலையைப் பற்றி விராசாமித் தேவரிடம் விசாரிக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன் நான். இதற்குள் அங்கேயே ஸ்டவ் மூட்டித் தேநீர் தயாரித்து முடித்துவிட்ட வீராசாமித் தேவர், கொஞ்சம் ரொட்டியும் தேநீரும் எடுத்துக் கொண்டு என் னிடம் வந்தார். நான் அதுதான் சமயம் என்று அவரிடம் என் கேள்வியைக் கேட்டுவைத்தேன்: “வீராசாமித் தேவரே! இது என்ன ஐயா, இங்கே ஒரு பெரிய சிலை இருக்கிறதே? இந்தக் குகை ஏதாவது கோவிலோ?"-

தேவர் தேநீரையும் ரொட்டியையும் எனக்கருகிலுள்ள ஒரு பாறையில் வைத்துக்கொண்டே, என் கேள்விக்குப் பதில் சொன்னார்.

“இதுங்களா? இது வெள்ளையத் தேவன் சிலை. இந்த இடம் ஒரு கோவில் மாதிரித்தான்னு வச்சுக்குங்களேன். இதுக்கு ‘வெள்ளையத் தேவன் பாறை’ என்று இந்தப் பக்கம் பேர் சொல்றதுங்க... இந்த வெள்ளையத் தேவனைப் பற்றிய சம்பவங்களையும், விரப் பிரதாயங்களையும் சொன்னாலே, வருஷக்கணக்காகச் சொல்லலாமுங்களே!” என்று பூர்வ பீடிகை போட்டார் தேவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/56&oldid=509514" இலிருந்து மீள்விக்கப்பட்டது