பக்கம்:மூவரை வென்றான்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

57


நாட்டாண்மைத்தேவர் காலமாகி விட்டதனால் அடுத்தபடி யாரை நாட்டாண்மை ஆக்குவது என்று தலைக்கட்டுக்கள் கூடி யோசித்தார்கள். வாலிபப் பருவத்தினன் ஆனாலும் சாத்வீகமான குணமும், பொறுப்புணர்ச்சியும், தேவையான விஷய ஞானமும் இருந்ததனால் வெள்ளையத் தேவனையே அடுத்த நாட்டாண்மையாகத் தேர்ந்தெடுத்தார்கள். வெள்ளையத்தேவனும் தன்னுடைய வயதுக்கு மறிய அந்தப்பொறுப்பை ஏற்றுச் சாமர்த்தியமாக நிர்வகித்து வந்தான். வீரப்பாண்டியத்தேவர் இல்லாத குறையை அவனுடைய திறமையால் போக்கிவிட்டான். அவன் சாமர்த் தியத்துக்கு ஒரு சோதனையாக வந்தது அந்தச் சம்பவம்.

அது தை மாதம்! அன்று வெள்ளிக்கிழமை. உள்ளுர் மாரியம்மன் கோவிலின் வருஷாந்தரத் திருவிழாவிற்காக வெள்ளையத்தேவன் வீட்டில் தலைக்கட்டுக்கள் கூடியிருந்தார்கள். திருவிழாவுக்குத் தேதி குறிப்பிடுவது முதல், ‘எப்படி எப்படி நடத்தலாம்?’ என்பதுவரை அவர்கள் கூடி ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் திடீரென்று. சல்சல்-என்ற சதங்கை ஒலியோடு வீட்டு வாசலில் ஒரு வில் வண்டி வந்து நின்றறு. யாவரும் காரணம் புரியாமல் திகைத்தனர், வெள்ளையன் எழுந்து வீட்டு வாசலுக்கு வந்து பார்த்தான்.

வண்டிக்காரன் மூட்டை முடிச்சுக்களை இரண்டு கைகளிலும் எடுத்துக்கொண்டு முன்னால் வர, மீனாட்சி அழு தழுது சிவந்த கண்களுடன் துயரமே உருவாய், அவன் பின்னால் நடந்து வந்தாள்.

வெள்ளையத்தேவன் மனம் ஏதேதோ எண்ணிப் பதறியது வண்டிக்காரன் மூட்டை முடிச்சுகளைத் திண்ணையிலேயே போட்டுவிட்டுத் திரும்பிப் பாராமல், வண்டியில் போய் ஏறிக்கொண்டு போய்விட்டான். வெள்ளையனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை!

மீனாட்சி வாசற்படியில் வந்து நீரொழுகும் கண்களுடன் தலைகுனிந்து நின்றாள். இதற்குள் வீட்டிற்குள்ளே உட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/59&oldid=509517" இலிருந்து மீள்விக்கப்பட்டது