பக்கம்:மூவரை வென்றான்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

63


கரிசல்குளத்தில் பண்ணைத்தேவரின் வீடு ஊரின் மேலப் பக்கத்தில் ஒரு பெரிய தோட்டத்துக்கு நடுவே இருந்தது. ஏறக்குறைய ஒரு குட்டி அரண்மனையைப் போல விளங்கியது. அந்த வீடு. தன் தகப்பனார் வீர பாண்டியத்தேவர் உயிரோ டிருந்தபோது அவரோடு இரண்டு மூன்று முறை அந்த வீட்டிற்கு வந்து போயிருக்கிறான் வெள்ளையத் தேவன். மாமன் கூறியதிலிருந்து, ‘வீட்டின் கூடத்தில்தான் பொன்னி படுத்து உறங்குவது வழக்கம்’ - என்று எண்ணினான் அவன்.

பின்நிலாக் காலமாகையினால் இருட்டு பயங்கரமாகக் கப்பிக் கிடந்தது. பண்ணைத்தேவர் அரண்மனைத் தோட்டத் தைச் சுற்றி ஒன்றைரை ஆள் உயரத்திற்கு மதில் இந்த மதிற் சுவரில் எடுத்திருந்தது. எந்த இடம் உள்ளே ஏறிக் குதிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று பார்த்துக் கொண்டே இருளில் மதிலைச் சுற்றிவந்தான் வெள்ளையத். தேவன்.

மதிலின் தென் மேற்கு மூலைக்கு வந்தபோது அவனுக்கு மிக அருகில் இருளின் நடுவே தெரிந்த ஒரு காட்சி அவனைத் திடுக்கிட்டு நிற்கும்படிச் செய்தது. சரியாக அவன் வந்தி ருக்கும் அதே நாளில், அதே இரவில் பண்ணைத் தேவரின் வீட்டிலே கொள்ளையடிப்பதற்காக ஒரு கொள்ளைக்கூட்டத். தினரும் அங்கே வந்திருந்தார்கள்! அந்தப் பிராயத்தில் ‘தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் என்ற ஒரு வகைத் திருட கள் அப்போது, நல்ல இருட் காலத்தில் இப்படிக் கூட்டமாக வந்து சூறையாடிச் செல்லும் நிகழ்ச்சி, அடிக்கடி நடந்து வந்தது. இதுவரை அவர்கள் துணிந்து கொள்ளைக்கு வராத இடங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று கபிலைக் குறிஞ்சி மற்றொன்று கரிசல்குளம். இரண்டு இடங்களிலும் மறவர்கள் அதிகமாய் வசித்து வந்ததுதான் அவர்கள் அச்சத்துக்குக் காரணம்.

இருளில் மறைந்து நின்ற வெள்ளையத் தேவன்னின் இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. அவனது இடுப் பிலே சுரிகை எனப்படும் பழைய காலத்துச் சுழல் கத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/65&oldid=508095" இலிருந்து மீள்விக்கப்பட்டது