பக்கம்:மூவரை வென்றான்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

மூவரை வென்றான்/வெள்ளையத்...

அந்த ஆளைத்தான் நீ மயக்கமுறச் செய்து, புதருக்குள்ளே கொண்டுபோய்த் தள்ளிவிட்டாயே! அந்த ஆளாக நான் நடிக்கிறேன். ஒவ்வொரு ஆளாக இறங்க இறங்க நீ பக்கத்தில் சுருள் கத்தியோடு மறைந்திருந்து வேலையைத் தீர்த்து’ப் பாழும்கிணற்றில் போட்டுவிடு!”

“மாமா ஆபத்து நிறைந்த காரியமாயிற்றே இது? இதனால் நமக்கென்ன லாபம்? அகப்பட்டுக் கொண்டோ மானால் நாமும் இறங்க நேரிடுமே?”

“மதிலேறி இறங்குகின்ற அவர்களில் முதல் ஆளின் கையிலேதான் கொள்ளையடித்தப் பொருள்களெல்லாம் இருக்கப்போகின்றன. முதுகில் காலை வைத்து இறங்குவ தற்கு முன் அவன் கொள்ளைப் பொருளை நிச்சயம் என்னிடம்தான் கொடுப்பான்! இருளில் நான் வேற்றவன்’ -என்ற வித்தியாசத்தை அவன் கண்டுபிடிக்க முடியாது. பண்ணைத்தேவரின் பொருளைக் கட்டாயம் மீட்டு, அவரிடம் கொடுத்துவிடலாம். அப்படிக் கொடுத்தால், அவருடைய நன்மதிப்பு நிச்சயம் கிடைக்கும். இவைகளெல்லாம் நமக்கு லாபம் இல்லையானால் சொல்! இப்போதே திரும்பிவிடுவோம்” என்று மாமன் சிறிது கோபம் தொனிக்கும் குரலிலேயே கூறினார்.

“நல்லது! அப்படியே செய்யலாம் மாமா” என்று. வெள்ளை சம்மதித்தான்.

இதற்குள் உட்புறம் மதிற் சுவரோரத்தில் ஆட்கள் தடதடவென்று ஓடிவரும் ஒசையும், ‘நாங்கள் வந்துவிட்டோம்! வெளியிலிருக்கும் நீ, இறங்குவதற்கு வசதியாகக் குனிந்துகொள்’ என்பதை எச்சரிக்கும் சீழ்க்கை ஒலியும் கேட்டது.

மாமன், நான் குனிந்து நிற்கிறேன்! தயார்’ என்பதற்கு அறிகுறியாக ஒரு சீழ்க்கை அடித்துவிட்டுக் குனிந்து நின்று கொண்டார். வெள்ளையத்தேவன் சுருள் கத்தியை உருவிக்கொண்டு சுவர். ஒரமாக இருளில் மறைந்து நின்றுகொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/70&oldid=508100" இலிருந்து மீள்விக்கப்பட்டது