பக்கம்:மூவரை வென்றான்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மூவரை வென்றான்/வெள்ளையத்...

அவன் சந்தேகித்துவிட்டான் என்பது அவர்களுக்கு ஐய மறத் தெரிந்துவிட்டது!

குனிந்துகொண்டிருந்த மாமன் சட்டென்று விலகி நின்று, கத்தியை உருவினார். தேவனும் அவரும் சுவரில் நிற்பவனுக்கு நேரே உருவிய கத்திகளோடு மறித்துக் கொண்டு நின்றனர். கொள்ளைப் பொருள்களின் மூட்டை அவர்கள் காலடியில் இருந்தது.

சுவரில் நின்றவன் ஒரு விநாடி திகைத்தான். அடுத்த விநாடி விருட்டென்று தன் இடையிலிருந்த சிறு பிச்சுவாக் கத்தி ஒன்றை உருவினான். உருவிய வேகத்தில் வெள்ளையத் தேவனின் வலது தோள்பட்டையை குறி வைத்து வீசினான்.

இதைச் சிறிதும் எதிர்பாராத வெள்ளைத்தேவன், சட் டென்று கத்தி வீச்சிலிருந்து தப்புவதற்காகக் குனிந்து கொடுத்தான். ஆனால் ..அந்தோ!...,விதியின் கொடுமையை என்னவென்று சொல்வது? தோள்பட்டையில் பாயவேண் டிய கொள்ளைக்காரனின் பிச்சுவா, வெள்ளைத்தேவனின் வலது செவியின் மேற்பாகத்தை ஆழமாகத் தர்க்கிவிட்டுக் கீழே விழுந்தது. தேவன் வலி பொறுக்க முடியாமல் அலறி னான். மாமன் திடுக்கிட்டு அவனருகிற் சென்றார். கத்தி பாய்ந்த வேகத்தில் காதில் சுட்டு விரலளவு துளைத்திருந்தது: சுவரின்மேலிருந்த கொள்ளைக்காரன் கைகளைப் பலமாக ஓங்கிக்கொண்டே, தெலுங்கில் ஏதோ இரைந்து கத்திவிட்டு, அப்படியே சுவரின் மேல்தளத்திலேயே நடந்து சென்று ஒரு குதிரையின் முதுகில் பாய்ந்துவிட்டான். தேவனும் ம்ாமனும் இதைக் கவனித்து ஓடி வருவதற்குள் குதிரை இருளில் ஒரு பர்லாங் தூரம் சென்றுவிட்டது!

“இவ்வளவு முயன்றும் இவன் தப்பி விட்டானே?” என்று மாமன் கூறினார்.

காதில் கத்தி துளைத்த இடத்தில் இசிவெடுத்து வலி துடிதுடிக்கச் செய்தது வெள்ளையத்தேவனை. அவன் அப்படியே அசந்துபோய்விட்டான். மாமன் தன் தலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/72&oldid=508102" இலிருந்து மீள்விக்கப்பட்டது