பக்கம்:மூவரை வென்றான்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

71


பாகைத் துணியைக் கிழித்து மண்டையோடு சேர்த்து வெள்ளையனின் காதில் ஒரு கட்டுப் போட்டு இரத்தம் வரு வதைத் தடுத்தார்.

“மாமா!...வலி பிராணன் போகிறதே!” என்று வெள்ளை அலறினான்.

“வெள்ளை, பொறு. உள்ளே விட்டிற்குள் போய்விட்டால், காதுக்கு ஏதாவது மருந்து போடலாம். இந்தக் கொள்ளைப் பொருள்களின் மூட்டையோடும் குதிரை யோடும் இங்கேயே மதிலோரத்தில் நின்று கொண்டிருப்போ மானால், நாமே இந்தக் கொள்ளையை நடத்தினோம், என்று மற்றவர்கள் வந்து தீர்மானிக்கும்படி ஏற்பட்டாலும் ஏற்பட்டுவிடும்!” - மாமன் பதறினார். மீதமிருந்த மற்றொரு குதிரையை இழுத்துக்கொண்டு போய்க் கொள்ளைப் பொருள் களின் மூட்டை கிடந்த இடத்தில் சுவரருகே ஏறிக் குதிப் பதற்கு வசதியாக நிறுத்தினார். அப்போது தீவட்டி வெளிச் சத்தில் கீழேகிடந்த அந்தப் பிச்சுவாக் கத்தி அவர் கண்களில் பட்டது. வெள்ளையத் தேவனின் காதைத் துளைத்து விட்டுக் கீழே வீழ்ந்திருந்த அந்தக் கத்தியின் நுனியில் குருதிக் கறை படிந்திருந்தது. மாமன் அதைக் கீழே குனிந்து எடுத்தார்.

அருகில் தரையில் புழுதியோடு புழுதியாக விழுந்து, மங்கலான ஒளியைக் கொடுத்துக்கொண்டிருந்த தீவட்டியைக் குனிந்து எடுத்துக் கத்தியின் பிடிக்கு நேரே காண்பித்தான் வெள்ளையத்தேவன்.

மறுகணம், “பாப்பைய நாயக்கன்” என்று அந்தக் கத்தி யின் பிடியில் செதுக்கியிருந்த எழுத்துக்களை அதில் கண்டு. இரைந்து படித்தார் மாமன். அவை தெலுங்கு எழுத்துக்கள். மாமன் கத்தியை இடுப்பிலே செருகி, மறைவாகப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டார்.

“வெள்ளை! உனக்குத் தெலுங்கு தெரியாது அல்லவா? உன்மேல் இந்தக் கத்தியை வீசிவிட்டு ஓடிய போது, அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/73&oldid=508103" இலிருந்து மீள்விக்கப்பட்டது