பக்கம்:மூவரை வென்றான்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

மூவரை வென்றான்

உன்னை நோக்கித் தெலுங்கில் கத்தினானே, அதற்கு என்ன அர்த்தம் என்பதைத் தெரிந்துக்கொண்டாயா!”

“இல்லையே மாமா!”

“இன்று இந்தக் கொள்ளையில் நான் அடைந்திருக்க வேண்டிய பரிபூரணமான வெற்றியை நீ கெடுத்துவிட்டாய்! இனிமேல், என்றும், எந்த விநாடியிலும், நீ யாராக இருந்தாலும், உன் உயரை நான் கொள்ளையிட முயன்று கொண்டிருப்பேன் என்பதை மறந்துவிடாதே! ஜாக்கிரதை இந்தா! பெற்றுக்கொள், “நீ யார்?” என்பதை என்றும் நான் கண்டுகொள்ள ஓர் அடையாளச் சின்னம்’—இவ்வாறு கூறிவிட்டுச் சென்றான் அவன்.”

இதன் பின் அவர்கள் இருவரும் குதிரையை நிறுத்தி, அதன் மூலமாகக் கொள்ளைப் பொருள் அடங்கிய மூட்டையையும் எடுத்துக்கொண்டு, மதிற்கூவரைக் கடந்து தோட்டத்திற்குள் குதித்தனர். வெளியே தரையில் கிடந்த தீவட்டி அணைந்துவிட்டதால், குதிரை இருளோடு இருளாகச் சுவரருகில் நின்று கொண்டிருந்தது. அப்போதுதான் பின் நிலா மேலே கிளம்புகின்ற நேரம் ஆகியிருந்தது.

மாளிகை வாசலில் இரண்டு பெரிய நாய்கள் ரத்தம் கக்கிச் செத்துக் கிடந்தன. அவைகளின் கழுத்துக்கள் திருகி முறுக்கப்பட்டிருந்தன. அது திருடர்களின் கைவரிசை என்று தேவனும் மாமனும் அறிந்துகொண்டிருந்தனர். மாளிகைக்குள் எந்தப் பொருளும் அதிகமாகச் சூறையாடி இறைக்கப்படவில்லை. வீடு ‘ஒழுங்காகவே’ இருந்தது. கீழ் அறையிலிருந்த ஒரு பெரிய இரும்புப்பெட்டி மட்டிலும் உடைக்கப்பட்டுக் காலியாகக் கிடந்தது! தீவட்டிகளிலிருந்து வடிந்திருந்த, அங்கங்கே கீழே சிந்தித் தரையை அசங்கியப் படுத்தியிருந்தது. தூணில் இரண்டு காவற்காரர்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு அப்போது தம் நினைவிருந்ததாகத் தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/74&oldid=508104" இலிருந்து மீள்விக்கப்பட்டது