பக்கம்:மூவரை வென்றான்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

79

"பெரியவரே! நான் இப்பொழுது உங்களை வேண்டிக் கொள்ளப் போகிற வேண்டுகோள் உங்களுக்குக் கோபத்தை, உண்டாக்குவதாகவே இருக்கலாம். ஆனால், எப்படியும் என்னை வித்தியாசமாக நினைத்துக்கொள்ளாமல், நீங்கள் இதற்குச் சம்மதித்துத்தான் ஆகவேண்டும்” என்று பண்ணைத் தேவர் பீடிகை போடும்போதே,

“நீங்கள் சொல்லி, நான் எதை மறுக்கப் போகிறேன்’ பண்ணைத் தேவரே? தாராளமாகச் சொல்லுங்கள்...” என்று குழைந்து கொடுத்தார் மாமன்.

“அப்படியில்லை பெரியவரே! வாஸ்தவத்திலேயே எவருக்கும் கோபத்தை உண்டாக்கக் கூடிய விஷயம் நான் பிரஸ்தாபிக்கப் போவது?”

“சும்மா சொல்லுங்கள்.”

“வெள்ளையத் தேவன் ஏற்கெனவே உங்கள் மருமகன்! உங்கள் அருமை மகள் அவன் மனைவியாயிருக்கிறாள். இப்போது என் மகள் பொன்னிக்கும் அவனிடம் அதேஸ்தானத் தைப் பெறுவதற்கு, நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் இதுதான் என்.வேண்டுகோள்"—

மாமன் முகத்தில் அடுக்கடுக்காகச் சுருக்கங்கள் விழுந்தன. அவர் சிந்தனையில் ஆழ்ந்தார். பண்ணைத் தேவர் மாமனின் முகத்தையே இமையாமல் பார்த்துக்கொண் டிருந்தார்.

“உங்கள் விருப்பத்தை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், தற்போது வெள்ளையத் தேவனின் மனைவியாக விளங்கும் என் மகள், இதற்குச் சம்மதிக்கின்றாளோ, என்னவோ? அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.” சிந்தனை செய்த பிறகு மாமன் கூறினார்.

“உங்கள் மகளையும் வெள்ளையனையும் முழு மனத்தோடு இதற்குச் சம்மதிக்கச் செய்வது என் பொறுப்பு வயது முதிர்ந்த அனுபவஸ்தராகிய உங்கள் சம்மதந்தான். இப்போது எனக்குத் தேவை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/81&oldid=508111" இலிருந்து மீள்விக்கப்பட்டது