பக்கம்:மூவரை வென்றான்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

மூவரை வென்றான்

“என் சம்மதம் இந்தக் கணமே கிடைத்ததாக வைத்துக் கொள்ளலாம்.”

அவர்கள் பேச்சு இவ்வளவிலே முடிந்தது. பொன்னியை அழைத்துக்கொண்டு, கபிலக்குறிஞ்சிக்குப் புறப்பட்டார் பண்ணைத்தேவர். இடையில், மீனாட்சிக்குப் பெருத்திங்கு இழைக்க எண்ணிய கரிசல்குளத்தான், தன் பிழைக்காக எல்லோரையும் வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

பண்ணைத் தேவர், மாலை மயங்கும் நேரத்திற்குக் கபிலக்குறிச்சியின் தலைக்கட்டுகளோடும், வெள்ளையனின் மூதல் மனைவியோடும், மீண்டும் பண்ணை மாளிகைக்குத் திரும்பி வந்தார்.

வெள்ளையனின் முதல் மனைவியும், தலைக்கட்டுக்களும் அவன் பொன்னியையும் மணந்துகொள்வதற்குத் தங்கள் சம்மதத்தை முழுமனத்தோடு தெரிவித்தனர். வெள்ளையத் தேவனுக்கு ஏற்கனவே பொன்னியிடமிருந்த மறைமுகமான சபலம், அவன் இதை மறுக்கத் தூண்டவில்லை.

“நல்லவற்றை உடனே செய்ய வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாளையே ஒரு நல்ல முகூர்த்தம் இருக்கிறது. பரிசம் போடாமலே நாளைக் காலை கோவிலில் திருப்பூட்டை நடத்திவிட வேண்டும்” என்றார் பண்ணைத்தேவர்.

எல்லோருமே அதற்கு உடன்பட்டனர். வெள்ளையத் தேவனைலிட அவன் முதல் மனைவிக்குத்தான் பொன்னியின் களங்கமற்ற சுபாவத்தில் பெரிதும் காதல் ஏற்பட்டிருந்தது! முதலில் தயங்கினாலும், பின்பு இந்தப் புதிய சம்பந்தம் தன் மகளுக்குக் கெடுதலைத் தராதென்றெண்ணி, மனம் அமைதியடைந்தார் மாமன். இந்த நிக்ழ்ச்சிகளெல்லாம் நடந்து ஆறு வருடங்களுக்குப் பிறகுதான் வெள்ளையத்தேவனுடைய வாழ்க்கையில் அந்தப் பயங்கரமான நிகழ்ச்சி குறுக்கிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/82&oldid=508112" இலிருந்து மீள்விக்கப்பட்டது