பக்கம்:மூவரை வென்றான்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

91


பஞ்சாயத்து போர்டில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்கள். ரயில்வேக்காரர்கள் இரண்டு ஊராருக்கும் நல்ல பிள்ளையாக ஒரு காரியம் செய்தார்கள். இரண்டு ஊரின் பேர்களிலும் சரி பாதியாக எடுத்து இணைத்து, ஸ்டேஷனுக்கு ராமகிருஷ்ணாபுரம் என்று பையர் வைத்துவிட்டார்கள். மதுரையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வழியில் - சிவகாசிக்கு அடுத்த ஸ்டேஷனாக அமைந்திருக்கிறது ராமகிருஷ்ணாபுரம். இந்த ஸ்டேஷனில் இறங்கித் தெற்கே, ஐந்தரை மைல் வண்டிப்பாதையிலும் ஒற்றையடிப் பாதை யிலுமாக நடந்தால், எங்கள் ஊர் நதிக்குடிக்குப் போய்ச் சேரலாம். கிருஷ்ணாபுரம் கொஞ்சம் மேற்கே ஒதுங்கிவிடுவ தால், எங்கள் ஊர் வழி தனியே பிரிந்துவிட்டது. ஐந்தரை, மைலும் ஒரே செம்மண் பார். காற்றடித்துவிட்டால் மிளகாய்ப் பொடியைத் தூவின மாதிரிச் செம்மண் புழுதி பறக்கும். ஒரே ஒரு பெரிய ஆஸ்ரமத்தைத் தவிர அந்த ஐந்தரை மைலில் வேறு மரமே கிடையாது. வெறும் பொட்டல். குடிக்கத் தண்ணீர் கிடையாது. அந்த ஆலமரத் தடியில் ஒரு ஊருணியும் இடிந்துபோன மடம் ஒன்றும் இருந்தன. அதற்கு அங்கணப் பரதேசி மடம் என்று பெயர்.

இந்த மடத்துக்கு அடுத்தபடி இருபது முப்பது அடி பள்ளத்தாக்கிலேயே இரண்டரை மைல் தொலைவு நாற். புறமும் வானமுகடுகளைத் தவிர வேறெதுவும் தெரியாது. அங்கங்கே இரண்டொரு பனை மரங்கள் நிற்கும். இந்த இரண்டரை மைல் பள்ளத்தாக்கிற்குத்தான் எங்கள் பக்கத்தில் தலைவெட்டிக்காடு-என்று ஒர் பயங்கரமான காரணப் பெயர் ஏற்பட்டிருந்தது. இந்தச் செம்மண் காட்டையும் இதில் முளைத்திருக்கும் பனைமரங்களையும் நினைக்கும்போது என் தாத்தாவின் நரை மயிர்ப் பொட்ட லான சிவப்பான வழுக்கைத் தலை என் நினைவிற்கு வரும், அதோடு மட்டும் நினைவு நின்றுவிட்ாது. இளம் பருவத்தில் இந்தத் தலைவெட்டிக்காடு என்ற பயங்கரப் பிரதேசத்தைப் பற்றி வழுக்கைத் தலை தாத்தாவிட்ம் கேட்ட கதைகளை நான் தாத்தாவானாலும் மறக்க முடியுமா? நல்ல வேளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/93&oldid=507997" இலிருந்து மீள்விக்கப்பட்டது