பக்கம்:மூவரை வென்றான்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

மூவரை வென்றான்/தலைவெட்டிக்...

யாக இப்போதெல்லாம் அந்தக் காலத்தில் நிகழ்ந்தவை போல எந்தவிதமான பயங்கர சம்பவங்களும் தலைவெட்டிக் காட்டுப் பாதையில் மருந்துக்குக்கூடக் கிடையாது. பேர ளவில்தான் தலைவெட்டிக்காடு என்ற பயங்கரம் நிலைத் திருக்கிறது. ஆனாலும் பழைமையை நினைத்துப் பார்த்து: அதை உங்களுக்குச் சொல்வதில் எனக்கு ஒரு திருப்தி. அந்தத் திருப்திக்காகத்தான் இதை இங்கே எழுதுகிறேன்.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் எங்கள் ஊரில் வாழ்ந்த ஒரு மனித தீரரைப் பற்றிய கதை. வீரம், தீரம் என்றெல்லாம் சாமானியமான சொற்களைக்கொண்டு அந்த மனிதரின் சாமர்த்தியத்தைக் கூறிவிடமுடியாது, அவர் ஒரு கம்பீரமான அவதார புருஷர் என்றுதான் சொல்ல வேண்டும்.

மோதிரக் கடுக்கன் முத்துசாமி ஐயர் என்றால் அந்தத் தலைமுறையில் இந்தப் பிரதேசம் முழுவதும் தெரியும். இப் போதும் பழைய காலத்துக் கிழவர்கள் சிலர் அந்தப் பெயரை அறிவார்கள்.

ஆறு அடிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். பிரா மணரானாலும் தேவமார், மறவர்கள் முதலியவர்களுக்கு அமைகிற மாதிரிக் கட்டு மஸ்தான தேகம் அவருக்கு வாய்த் திருந்தது, பாறை மாதிரி இறுகிப் பரந்த மார்பு. மிருதங் கத்தை குறுக்குப் பாட்டில் நிறுத்தி வைத்ததுபோல் பருத்த புஜங்கள். பயில்வான்கள் மாதிரி சதைப் பிடிப்புள்ள தொடைகள். சிறு வயதிலேயே சிலம்பம், குஸ்தி, மல்லுக் கட்டு, தண்டால், பஸ்கி எல்லாம் செய்து பழகியவர் அவர். பரந்த நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டுக்கு நடுவில் சிறிய குங்குமப் பொட்டு வைத்திருப்பார். இவை தவிர, அவருடைய பிரசித்திப் பெற்ற பேருக்குக் காரண மான பொருள்கள் காதுகளில் தொங்கின. அதுதான் மோதிரக் கடுக்கன்.

மோதிரக் கடுக்கன் என்றால் இந்தக் காலத்தில் பலருக் குப் புரியாது. அதை வேறொரு விதமாகப் புரிய வைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/94&oldid=507998" இலிருந்து மீள்விக்கப்பட்டது