பக்கம்:மூவரை வென்றான்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

மூவரை வென்றான்/தலைவெட்டிக்...

அவரைப் பொறுத்த மட்டில் கிடையவே கிடையாது. மனிதன் நடத்தையில் தங்கம் என்றால் தங்கம். அப்படிப் பட்டவருடைய வாழ்க்கை தலைவெட்டிக்காடு என்ற இடத்தில் ஒரு பெண் காரணமாக முடிய நேர்ந்தது. என்றால், அதுதான் இந்தக் கதையிலேயே மிகப் பெரிய ஆச்சரியம்.

அந்தக் காலத்தில் எங்கள் ஊருக்கு ரயில்வே ஸ்டேஷன் கிடையாது. கிழக்கே சிவகாசியையும், மேற்கே பூரீ வில்லிபுத்துரையும் விட்டால் வேறு ரயில்வே ஸ்டேஷன் நடுவில் இல்லை. கலியாணம், கார்த்திகை, விசேஷங்களுக்குச் சாமான்கள் வாங்க வேண்டுமானால், இந்த ஊர்களில் ஏதாவது ஒரு ஊரில் போய்த்தான் வாங்கிக்கொண்டு வரவேண்டும். பெரும்பாலும் தலைவெட்டிக்காடு வழியே குறுக்குப் பாதையில் சிவகாசிக்குப் போய்த்தான் சாமான் வாங்கி வருவார்கள். தலைவெட்டிக் காட்டைக் கடந்து வடகிழக்கே சென்றால், சிவகாசிக்குப்பத்து மைல். அந்தப் பத்து மைலுக்குள் இரண்டு கிராமங்கள் இடையில் இருந்தன. தாள்கொண்டான்புரம், மாறனேறி என்று இந்த இரண்டு ஊர்களில் தாள்கொண்டான்புரம் இப்போது பாழடைந்து விட்டது. ஊர்மட்டுமில்லை, அதன் பேரும் பாழடைந்து “தாட்னாபுரம் என்று சிதைந்து வழங்கி வருகிறது. இதற்கு நேர்மாறாக மாறனேரி இப்போது பெரிய ஊராகி விட்டது.

இந்த இரண்டு கிராமங்களிலுமாக அந்தக் காலத்தில் ஐம்பது, அறுபது அம்பலக்காரர் குடும்பங்கள் வசித்து வந்தன். இந்த அம்பலக்காரர்களுக்கும், எங்கள் ஊராருக்கும் பாசிக்குத்தகை உரிமைபற்றி ஒரு விரோதம் பரம்பரையாக இருந்தது. எங்கள் ஊருக்கு வடபுறம் சேவல் குளம் என்று ஒரு பெரிய பாசன ஏரி உண்டு. அதில் மீன் குத்தகை மட்டும் வருஷத்துக்கு ஆயிரம், இரண்டாயிரத்துக்குக் குறையாமல் போகும். இந்த ஏரி, மாறனேரிக்குப் பக்கத்தில் இருந்த தினால் மாறனேரி, தாள்கொண்டான் புரம் ஆகிய இரண்டு ஊர் அம்பலக்காரர்களும் ஒன்று கூடி, வருஷா வருஷம் எங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/96&oldid=508121" இலிருந்து மீள்விக்கப்பட்டது