பக்கம்:மூவரை வென்றான்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

95

ஊராரிடம் குத்தகை உரிமை பெறாமலே மீன் பிடிக்கத் தொடங்கினார்கள்.

‘ஏரியில் மீன் இருக்கிறது! அதைக் குத்தகைக்குவிட உங்களுக்கென்ன அதிகாரம்?’ - என்று அம்பலக்காரர்கள் விதண்டாவாதம் பேசினர். இதன் பின் இரு சாராருக்கு. மிடையில் இரவும், பகலும் அடிதடிகள் கலகங்கள் தொடர்ந்து சில வருடங்கள் நடந்தன. எங்கள் ஊரில் மோதிரக் கடுக்கண் முத்துசாமி ஐயர் மட்டும் இருந்திருக்க வில்லையானால், அம்பலக்காரர்கள் எப்போதோ ஊரைச் சூறையாடியிருப்பார்கள். அவருடைய ‘அத்து’ - எங்கள் ஊர்மேல் அம்பலக்காரருக்குக் கொஞ்சம் பயம் இருந்தது. பின்பு விஷயம் கோர்ட் வரை போயிற்று. தீர்ப்பு எங்கள் ஊராருக்குச் சாதகமாகவே ஆகிவிட்டது.

இந்தப் பாசிக் குத்தகை விவகாரம் முடிந்த பிறகு, அம்பலகாரர்களுக்கு எங்கள் ஊரார்மேல் அளவு கடந்த, ஆத்திரம் ஒண்டி சண்டியாக சிவகாசிக்குச் சாமான் வாங்கப் போகிற எங்கள் ஊர் ஆட்களை அந்தப் பிரசித்தி பெற்ற பள்ளத்தில் மன்றந்திருந்து அம்பலக்காரர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி செய்ய ஆரம்பித்தார்கள். ஒன்றிரண்டு மாதங்களுக்குள் எங்கள் ஊரைச் சேர்ந்த, ஏழெட்டுப் பேர் அந்தப் பள்ளத்தில் தண்லவெட்டப்பட்டார்கள். கொள்ளை, வழிப்பறிகளுக்கோ, எண்ணிக்கை சொல்ல முடியாது. இதனால் நாளடைவில் அந்தப் பள்ளத்திற்குத் ‘தலைவெட்டிக்காடு’ என்று பெயர் ஏற்பட்டுவிட்டது. சிவகாசிக்குப் போய் சாமான் வாங்கப் பயந்து, எல்லோரும் மேற்கே பூரீவில்லிபுத்துருக்கே போகத் தொடங்கிவிட்டார்கள். அம்பலகாரரின் தொல்லையால் எங்களுராரின் போக்குவரவு தலைவெட்டிக்காடு பிரதேசத்தில் சுத்தமாக நின்று போய்விட்டது.

ஆனால், எங்கள் ஊரில் ஒரே ஆளை மட்டும் இந்தக் கொலை, கொள்ளை, பயமுறுத்தல்களெல்லாம் கொஞ்சங், கூட அரட்ட முடியவில்லை. மோதிரக் கடுக்கன் ஐயர் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/97&oldid=508122" இலிருந்து மீள்விக்கப்பட்டது