பக்கம்:மூவரை வென்றான்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

97

உங்க குலத்தையே நாசம் பண்ணிப்பிடுவேன்! ஜாக்கிறதை என்று அடிக்கடி அவர்கள் ஊர் நடுவில் நின்றுகொண்டே அவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். அவர்களில் சிலரைச் சமயம் வாய்த்தபோது முதுகு தழும்பேற நொறுக்கித் தள்ளிக் கொண்டுமிருந்தார். எதற்கும் அஞ்சாத ராக்ஷஸ்த் தைரியம் ஐயருக்கு, ஐயரின் இந்த ராக்ஷஸத் தைரியம் வளர வளர் அம்பலகாரர்கள் அவர்மேல் வைத்திருந்த ‘கெத்து’ நலிந்து தேய்ந்து கொண்டிருந்தது. பழைய கெத்து இருந்த இடத்தில் குரோதம் தோன்றிவிட்டது.

ஒரு நாள் மாட்டுக்குப் பருத்தி விதை வாங்குவதற்காக மத்தியானம் ஒரு மணிக்குப் புறப்பட்டுச் சிவகாசிக்குப் போனார் மோதிரக் கடுக்கன் ஐயர். தம்பியின் வீட்டில் இரண்டு ஜதை காளை மாடுகள், நாலைந்து பசு மாடுகள் எல்லாம் இருந்தன. இவற்றுக்கு நாள் தவறாமல் காலையில் பருத்தி விதை அரைத்து வைப்பது வழக்கம். வாரத்துக்கு அரை மூட்டை பருத்தி விதை செலவாகும். மாதத்திற்கு, இரண்டு முறை சிவகாசிக்குப் போய் ஒரோர் மூட்டையாகப் பருத்தி விதை வாங்கி வந்துவிடுவார் ஐயர். அன்றைக்கு மத்தியானம்வரை பருத்தி விதை வாங்கப் போக வேண்டுமே. என்ற ஞாபுகமே இன்றிக் கழித்து விட்ட அவர், திடீரென்று. நினைத்துக் கொண்டு ஒரு மணிக்குப் புறப்பட்டிருந்தார்.

அவர் மாறனேரி ஊரைக் கடக்கும் போது பகல் இரண்டு மணிக்குமேல் இருக்கும். போகும்போது அவரிடம் ஏற்கெனவே குரோதம் கொண்டிருந்த அல்பலகாரர்கள் சிலர் அவரைக் கண்டு கொண்டனர்.

‘சரி! ஐயன் சிவகாசிக்குப் போகிறான். இன்றைக்கு ன்ன்னவோ வழக்கத்தை மீறி மதியத்துக்குமேலே புறப்பட்டிருக்கிறான். திரும்புவதற்குள் இருட்டிவிடும். திரும்பாமல் சிவகாசியில் தங்கவும் மாட்டான். நம்முடைய பழியை இன்றைக்குத் தலைவெட்டிப்பள்ளத்தில் வைத்துத் தீர்த்துக் கொண்டுவிட வேண்டியது. ஆளைத் தீர்க்க முடியாவிட்டாலும் இரண்டு காதுகளையாவது அறுக்கவேண்டும். மோதிரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/99&oldid=508124" இலிருந்து மீள்விக்கப்பட்டது