பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா ဒါ့ငဲ့- 101 வேண்டும் என்பதுடன், அதே வரிசை முறையில்தான் ஒட்டமும் எடுத்தாக வேண்டும். உதாரணமாக, இரண்டாவதாக பந்தடித்தாட வந்தவர் தள ஓட்டக்காரராகத் தளம் ஒன்றில் நின்று கொண்டிருக்கும் பொழுது, அவருக்கு முன்னதாக மூன்றாவதாக பந்தடித்தாட வந்தவர், மூன்று தளங்களையும் தொட்டுவிட்டு, 'ஒட்டம் எடுத்துவிட முடியாது. அவர் ஆட்டமிழக்காமல் இருக்கும்பொழுது, அவருக்குப்பின் வருபவர் முன்னே ஒடி ஒட்டம்’ எடுத்தாலும், அது கணக்கில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 6. குழுவின் தவறும் நடுவரின் முடிவும் (Forfeited Game) 1. ஒரு குழு குறித்த நேரத்திற்குள் ஆடுகளத்திற்கு வராவிட்டால்; 2. அல்லது, வந்திருந்தாலும் ஆடுகளத்திற்குள் ஆட வராவிட்டால்; 3. ஏற்கெனவே குறிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு வந்து ஆட்டத்தைத் தொடங்கிட மறுத்துவிட்டால்; 4. ஆட்டம் தொடங்கிய பிறகு, நடுவரால் ஆட்டம் இடையிலே நிறுத்தப்பட்டோ அல்லது முடிக்கப்பட்டோ அல்லது முடிக்கப்பட்டோ இல்லாத நிலையில், ஒரு குழு ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடிட மறுத்துவிட்டால்; 5. ஏதோ ஒரு காரணத்தால் ஆட்டம் இடையிலே கடுவரால் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்குகின்ற பொழுது, ஆட வாருங்கள் என்று நடுவர் அழைத்த