பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


102 ဒါ့ငဲ့- மென் பந்தாட்டம் பிறகும், 2 நிமிடங்களுக்குள் ஒரு குழு ஆடுவதற்கு வரத் தவறினால்; 6. ஆட்டத்தைத் தாமதப்படுத்தவும் அல்லது விரைவுபடுத்திடவும் கூடிய குறுக்கு வழிகளைத் தெளிவாகவே ஒரு குழு மேற்கொண்டால்; 7. நடுவரால் எச்சரிக்கப்பட்ட பிறகும் கூட, ஆட்டத்தின் ஏதாவது ஒரு விதியினைத் தொடர்ந்து ஒரு குழு மீறினால்; 8. ஒரு குழுவின் ஒரு ஆட்டக்காரர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படும் பொழுது, அதனை ஏற்காமல் ஒரு நிமிடத்திற்கு மேல் வெளியேறாமல் தாமதம் செய்தால்; ஒரு குழுவானது ஆட்டத்தை அதாவது தனது ஆடும் வாய்ப்பை இழந்துவிடும். அதாவது அந்த ஆட்டத்தில் அந்தக் குழு தோற்றதாக அறிவிக்கப்படும். அவ்வாறு அறிவிக்கப்பட்டபின், தவறு செய்யாத குழுவானது வென்றதாக அறிவிக்கப்பட்டு, அந்தக் குழுவிற்குரிய வெற்றி எண்ணானது (Point) 5-0 என்ற கணக்கில் குறிக்கப்படும். 7. பந்தடித்தாடும் முறை (Batting) 1. பந்தடித்தாடுபவர் (Batter) பந்தடித்தாடும் கட்டத்துக்குள் சென்று, தான் அடித்தாடக்கூடிய நிலையில் நின்று கொள்ள வேண்டும். 2. பந்தை அடித்தாடுகின்ற சமயத்தில், பந்தடித் தாடும் ஆட்டக்காரரின் ஒரு கால் அல்லது இரண்டு கால்களும் பந்தடித்தாடும் கட்டத்தின் கோடுகளைத்