பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா ဒါ့ 103 தொட்டுக் கொண்டிருக்கக்கூடாது. அதுமட்டுமன்றி, கோடுகளுக்கு வெளியேயுள்ள தரைப் பகுதியையும் தொடக்கூடாது. 3. பந்தெறிபவர் (Pitcher) பந்தெறியத் தயாராக நின்று கொண்டிருக்கும் பொழுது, பந்தடித்தாடுபவர்தான்நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து (Catcher) முன்புறமுள்ள மற்றொரு அடித்தாடும் கட்டத்திற்குள் சென்றுவிடக் கூடாது. தண்டனை: இது தவறாகும். விதியை மீறி நடந்து கொண்ட பந்தடிக்கும் ஆட்டக்காரர் ஆட்டமிழந்தார் (Out) என்று அறிவிக்கப்பட, பந்து நிலைப்பந்தாகிறது (Dead Ball). அதே சமயத்தில், தள ஒட்டக்காரர்கள் மேலும் ஒரு தளம் போவதற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 4. அடுத்த பந்தடிக்காரர் வரலாம் என்று நடுவர் அறிவித்த 1 நிமிடத்திற்குள், அடுத்த பந்தடிக்காரர் உடனே வந்து தனக்குரிய இடத்தில் முறைப்படி நின்று கொள்ள வேண்டும். தண்டனை: ஒரு நிமிடத்திற்குள் தனக்குரிய இடத்திற்கு வராத அந்த பந்தடி ஆட்டக்காரர், ஆட்டமிழந்தார் என்று நடுவரால் அறிவிக்கப்படுவார். பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். தள ஒட்டக்காரர்கள் முன்னேறிட அடுத்த தளம் நோக்கி ஒடலாம். ஆனால், ஒடுகின்ற சமயத்தில் தொடப்பட்டால் (அவர்கள்) தொடப்பட்டவர் ஆட்டமிழந்து போவார். 8. ஆடவருகின்ற வரிசையும் விதிமுறையும் 5. குறிப்பேட்டில் (Score Sheet) கொடுக்கப் பட்டிருக்கின்ற ஆட்டக்காரர்களின் பெயர் வரிசைப் படியே, ஒவ்வொருவரும் பந்தடித்தாடிட வர வேண்டும்.