பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 థ్రి மென் பந்தாட்டம் இவ்வாறு பந்தடிக்க வருகின்ற வரிசையின்படியே, ஒவ்வொரு குழுவின் மேலாளர்அல்லது குழுத்தலைவன் தள நடுவரிடம் பட்டியலைத் தரவேண்டும். அவர் அதனைக் கொண்டு சென்று குறிப்பாளரிடம் கொடுப்பார். தண்டனை: அவ்வாறு வரிசை முறையாகப் பெயர்களைத் தரத் தவறினால், அக்குழுவினை ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்துவிடுவார். 6. பந்தாட வருகின்ற வரிசை முறையை, நடுவரிடம் கொடுத்திருப்பதுபோலவே, ஆட்டம் முழுவதும் ஆட வந்து கொண்டேயிருக்க வேண்டும். யாராவது ஆட்டக்காரர்கள் ஒருவருக்குப் பதிலாக மாற்றாட்டக்காரர் ஆடவந்தால், எந்த ஆட்டக்காரர் வெளியேறினாரோ அவரிடத்தில் பெயரைப் பதிந்து கொண்டு, அவருக்குரிய ஆடும் வரிசை முறைக்கேற்பவே ஆடவர வேண்டும். 7. ஒவ்வொரு முறை ஆட்டத்திற்கும் (Inning) யார் முதலாவது பந்தடி ஆட்டக்காரராக வரவேண்டும் என்றால், முந்தைய முறை ஆட்டத்தில் பந்தடி வாய்ப்பு கிடைக்கப் பெற்றவருக்கு அடுத்த பெயருள்ளவரே வர வேண்டும். தண்டனை வரிசை முறை தவறாக ஆட வந்து விட்டால், அதை முறையீடு ஆட்டமாகக் (Appeal Play) கொள்ளலாம். 'முறையீடு ஆட்டத்தில் வந்துவிட்டால், அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற வகைகளை கீழே காணலாம்.