பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா સ્ટ્રેિકે 107 8. பந்தடிக்கும் ஆட்டக்காரர் எதிர்க்குழுவின் பந்தைப் பிடிப்பவருக்குரிய பணியான பந்தைத் தடுத்தாடுவது (Fielding) அல்லது பந்தை எறிவது (Throwing) போன்ற பணிகளில் ஈடுபடும்போது அடித்தாடும் கட்டத்திற்கு வெளியே வந்து தடை செய்வது கூடாது. அல்லது தான் நிற்கும், அடித்தாடும் கட்டத்திற்குள் நின்று கொண்டு வேண்டுமென்றே தடை செய்வதும் கூடாது. தண்டனை: பந்து நிலைப் பந்தாகிறது. பந்தடி ஆட்டக்காரர் இடையூறு விளைவித்தார் என்று நடுவர் எண்ணுகின்ற சமயத்தில், தள ஒட்டக்காரர்கள் முதலில் எங்கு நின்றார்களோ, அதன்படி அவரவர்கள் பழைய இடங்களுக்கே திரும்பி வந்துவிட வேண்டும். அத்துடன் பந்தடி ஆட்டக்காரரும் ஆட்டம் இழப்பார். ஆனால் அதில் விதிவிலக்குகள் உண்டு. அ) அதாவது ஆட்டக்காரர் இடையூறு விளைவிக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்தத் தளத்திற்கு ஒடும்போது தொடப்பட்டும் ஆட்டமிழந்து போனால், பந்தடி ஆட்டக்காரர்கள் ஆட்டமிழக்க மாட்டார். ஆ) இரண்டு ஆட்டக்காரர்களுக்குக் குறைந்த அளவில் ஏற்கெனவே ஆட்டக்காரர் ஆட்டமிழந்திருக்கும் நிலையில், மூன்றாம் தளத்தில் ஒரு ஒட்டக்காரர் நின்று கொண்டிருக்கும் பொழுது, பந்தடித்தாடும் தளத்தில் கின்று கொண்டு, ஆட்டத்திற்கு இடையூறு விளைவித்துக் கொண்டு நிற்கின்ற சமயத்தில், பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழக்கமாட்டார். ஏனென்றால், அந்த ஒட்டக்காரர் இான் ஆட்டமிழக்கின்றார்.