பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா હોન્ડે 111 தண்டனை: பந்து நிலைப்பந்தாகிறது. தள ஒட்டக்காரர்கள் ஒரு தளம் முன்னேறிச் சென்று நின்று கொள்ளலாம். அவர்கள் தொடப்பட்டாலும் ஆட்டம் இழக்க மாட்டார்கள் என்ற அளவில் அவர்கள் தங்களது தளங்களிலிருந்து முன்னேறிச் செல்ல அனுமதிக்கப் படுவார்கள். 13. விதிகளுக்குரியவாறு வரும் பந்தும், அடித்தாடிய பந்தும் அ) விதிகளுக்குட்பட்டவாறு எறியப்பட்ட பந்தானது அடித்தாடப்பட்ட பிறகு, பந்தடித்தாடிய தளத்திற்கும் முதல் தளத்திற்கிடையிலும் அல்லது பந்தடித் தளத்திற்கும் மூன்றாம் தளத்திற்கு இடையிலும் உள்ள எல்லைக்குட்பட்ட தரையினைத் தொட்டாலும் அல்லது அங்கேயே நிலை கொண்டுவிட்டாலும் அது சரியான பந்தடியாகும். ஆ) எல்லைக்குட்பட்ட சரியான தரையின் மேல் அல்லது மேலாகச் (On or Over) சென்று உள்ளாடும் ஆடுகளப் பகுதிக்குள் வந்துவிட்டாலும். இ) முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளங்களைத் தொட்டிருந்தாலும். ஈ) சரியான ஆடுகளத் தரையின்மேல் அல்லது மேலாகவோ, அங்கே நிற்கின்ற நடுவர் அல்லது ஆட்டக்காரரின் உடல் அல்லது உடையின் மேலோ 'ந்து பட்டிருந்தாலும். உ) முதல் அல்லது மூன்றாம் தளத்திற்கு அப்பால் சில்லில் பந்து விழுந்திருந்தாலும் அது சரியான பந்து (Fair Ball) என்றே ஏற்றுக் கொள்ளப்படும்.