பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

يهتكم 112 Sc மென் பந்தாட்டம் சரியான பந்து எது என்று கணக்கிட்டு நிர்ணயிக்கும் போது, வருகிற பந்தையும் அங்கிருக்கின்ற எல்லைக் கோட்டின் இணைப்பான தன்மையையும் தான் ஆராய வேண்டுமே தவிர, பந்தைப் பிடித்தாடுகின்ற (Fielder) ஆட்டக்காரர், அவர் பந்தைப் பிடிக்கும் பொழுது சரியான ஆடுகளத் தரையில் இருக்கிறாரா அல்லது ஆடுகள எல்லைக்கு வெளியே இருக்கிறாரா என்பதைப் பார்க்கக் கூடாது. தண்டனை: பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். தள ஒட்டக்காரர்கள் தளத்திற்கிடையில் தொடப்பட்டால் ஆட்டமிழக்கலாம் என்ற நிபந்தனைக்குட்பட்டு, எத்தனை தளங்கள் வேண்டும் என்றாலும் ஒடி முன்னேறிக் கொள்ளலாம். பந்தை அடித்தாடியவர், அவர் அடித்தாடிய பந்து ஆடுகளத் தரைப்பகுதிக்குள்ளே தான் சென்றது என்ற விதிக்கு ஏற்ப இருந்தால், அவரும் தள ஒட்டக்காரராக ஆகிவிடலாம். 14. எத்தனை தளங்கள் எடுத்துக் கொள்ளலாம்? அ) அடித்தாடிய பந்தானது சரியான ஆடுகளப் பகுதிக்கு மேல் அல்லது மேலாகச் சென்று பந்தடித்தாடும் தளத்திலிருந்து 225 அடிக்கு அப்பாலும் உள்ள வேலிக்குப் பின்புறம் அல்லது தடுப்புக்கு அப்பால் போய் விழுந்தால், அதற்கு ஒரு ஒட்டம் தரப்படும் (Home Run). ஆ) 225 அடிக்கு அப்பால் போய் பந்து விழாமல், 225 அடிக்குள் இருந்தால், அதற்கு 2 தளங்கள் மட்டும் ஒடிக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்படும்.