பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- = 15. சரியாக அடித்தாடிய பந்து தவறானதாக மாறுவது எப்படி? அ) சரியாக அடித்தாடிய பந்தானது பந்தடித்தாடும் தளத்திற்கும் முதல் தளத்திற்கும், பந்தடித்தாடும் தளத்திற்கும் மூன்றாம் தளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளதவறான தரைப்பகுதியில் பந்து தேங்கி நின்றால்; ஆ) பந்து அடிபட்டு மேலே போகும்பொழுது முதல் அல்லது மூன்றாம் தளத்திற்குத் தள்ளி உள்ள வெளிப்புற பகுதியின் (Foul Ground) மேல் அல்லது மேலாகப் போய்விடுதல்; இ) முதல் அல்லது மூன்றாம் தளத்திற்கு அப்பால் உள்ள வெளிப்புற பகுதியினை முதலில் பந்து தொட்டுவிடுதல்; ஈ) தவறான தரையாகக் கருதப்படும் வெளிப்புறப் பகுதியில் இருக்கும் நடுவர், ஆட்டக்காரர் உடை அல்லது உடலினைத் தொடுதல் அல்லது மற்ற தடுப்புக்கள் மேல் தொட்டுப் பந்து விழுந்தால்; சரியாக அடித்தாடிய பந்தும் தவறான பந்து என்று நடுவரால் அறிவிக்கப்படும். தண்டனை: (அ ஆ இரு பகுதிக்கும் உரியது). இவறான பகுதிக்குப் பந்து போனாலும், அது முறையோடு பிடிக்கப்படாமற் போனால், பந்து கிலைப்பந்தாகிறது. பந்து முறையோடு பிடிக்கப்பட்டு பிட்டால், பந்தடிக்காரர் ஆட்டமிழக்கிறார். 2. பந்து பிடிக்கப்படாமற் போனால் ஏற்கெனவே அவர் மேல் இரண்டு அடிகள்' என்ற நிலை இல்லாமல்