பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 హ్రీ மென் பந்தாட்டம் மாறிச் செல்ல அதாவது தொடப்பட்டு ஆட்டமிழக்காத வண்ணம், மாறிச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். விதிவிலக்கு: தவறாகவே பந்தெறிபவர் பந்தடித்தாடுபவரை நோக்கி எறியும் பொழுது, அதை பந்தடித்தாடுபவர் அடித்துவிட்டு முதல் தளம் நோக்கிப் பாதுகாப்பாக ஒடியும், மற்ற தள ஒட்டக்காரர்களும் ஒவ்வொரு தளத்திற்கும் ஒடிவிட்டாலும், ஆட்டம் தொடர்ந்து நடைபெறும். முறையிலா பந்தெறி என்று அதனை நடுவர் குறிப்பிடமாட்டார். குறிப்பு: தாமதமான நிலைப் பந்து என்பதை, நடுவரானவர் தனது இடது கையை சரிமட்டமாக நீட்டி, சைகை மூலம் காட்டிவிட வேண்டும். 6. முறையான பந்தெறி இல்லை என்று அறிவிக்கும் (soffenso (No Pitch) 1. ஆட்டம் நிறுத்தப்பட்டிருக்கும் போது (Suspension) பந்தெறிபவர் பந்தெறிந்தால்; 2. பந்தடித்தாடுபவர் பந்தடித்தாடத் தயாராக இல்லாத நிலைமையில் பந்தெறிந்தால்; அல்லது முதலில் எறிந்த பந்தை அடித்து அல்லது அடிக்க முயன்று அதனால் சமநிலை இழந்தவாறு நின்று கொண்டிருக்கும் போது எறிந்தால்; 3. சீக்கிரமாக தளத்தை விட்டு ஓடினார் என்பதற்காகத் தள ஒட்டக்காரர் வெளியேற்றப்படும் பொழுது (Out) பந்தெறிந்தால்; 4. தவறான பந்து (Foul Ball) என்று நடுவர் அறிவித்து, அப்பொழுது பந்து நிலைப்பந்தாகி இருக்கும் பொழுது - தள ஒட்டக்காரர் தன்னுடைய தளத்தை மீண்டும் வந்து அடைந்து நிற்பதற்குள் பந்தெறிந்தால்;