பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா - హ్రీ 11 பரப்பளவுள்ளதாக இருக்கும் ஒரு கிரிக்கெட் பந்தாடும் மட்டையுமாகும். ஆட்டத்தில் கலந்து கொண்டு ஆடுவோர் மூன்று பேர்களாவார்கள். ஒருவர் பந்தடிக்கும் ஆட்டக்காரர் (Batter), @76ār(5 பேர் தடுத்தாடும் ஆட்டக்காரர்கள் (Fielders), பந்தடிப்பவர் பின்புறம் ஒரு முளைக்கம்பும் (stake), பந்தை எறிபவர் (Pitcher) பின்புறம் ஒரு முளைக்கம்பும் என இரண்டு கம்பங்கள் ஊன்றி வைக்கப்பட்டிருக்கும். பந்தை எறிபவர் எறிகின்ற பந்தை மட்டையால் அடித்துவிட்டு, எதிரே உள்ள முளைக்கம்பு இருக்கும் இடத்திற்கு ஒடி வந்து தொட்டுவிட்டு, பிறகு, தான் முன்னே நின்று கொண்டிருந்த இடத்திற்குப் பின்புறம் உள்ள முளைக்கம்பை நோக்கி ஒடித் தொட்டுவிட வேண்டும். அதாவது பந்தைத் தடுத்தாடுபவர்கள் முளைக்கம்பை பந்தால் அடித்து விடுவதற்கு முன்பாகவே ஒடிப்போய் விடவேண்டும். இவ்வாறு ஆடி வரும் நாட்களில் ஆட்டத்தில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக, அதிக ஆட்டக்காரர்கள் ஆட்டத்தில் கலந்து கொண்டு ஆடியபோது, முளைக் கம்புகள் இரண்டிலிருந்து மூன்றாக எண்ணிக்கையில் மாறின. அதுபோலவே, அந்த ஆட்டத்தின் பெயரும் மாறிக்கொண்டே வந்தது. அதாவது, இரண்டு முளைக் கம்புகளை நட்டுவைத்து, நான்கு ஆட்டக்காரர்கள் இருந்து ஆடக்கூடிய ஆட்டத்திற்கு 2 கிழப் பூனை கிட்டம் (Twoold cat) என்ற பெயர் வந்தது. அதிகமான "ணிக்கையில் ஆட்டக்காரர்கள் வந்தபோது மேலும் சிசிேளைக்கம்பு அதிகமானபோது, அது 3 கிழப் பூனை ஃ-ம்' என்ற பெயரால் அழைக்கப்பட்டது.