பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T2ð3 অক্টে-> اouتلاooتتـــا ادع طرقا ا இரண்டு ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்திருக்கும் நிலையில், பந்தடிக்கும் ஆட்டக்காரர் மூன்றாவது அடி (Third strike) என்று நடுவர் கூறிவிடுகிற பொழுது, அந்தப் பந்தானது தரையைத் தொடுவதற்கு முன் பிடிக்கத் தவறிவிட்டால். 3. எல்லைக்கு வெளிப்புறப் பகுதியில் (Foul Ground) நின்று கொண்டிருக்கும் நடுவரின் உடல் அல்லது உடைமேல் பந்து பட்டுவிட்டால். குறிப்பு:பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். பந்தடி ஆட்டக்காரர் தளம் நோக்கி ஒடலாம். ஆனால் தொடப்பட்டால் ஆட்டமிழக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் அவர் தளம் நோக்கி ஒடலாம். 4. நான்கு பந்துகள் (Four Balls) என்று நடுவர் அறிவித்தவுடன். குறிப்பு: பந்து தடுக்கப்பட்டிருக்காவிடில், பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே கருதப்படும். தொடப் பட்டாலும் ஆட்டமிழக்கமாட்டார் என்பதின் பேரில், பந்தடிக்கும் ஆட்டக்காரர் ஒரு தளம் நோக்கிப் போக அனுமதிக்கப்படுவார். ஒரு தளம் முன்னேறிச் செல்ல அவருக்கு உரிமையுண்டு. 5. பந்தெறியாளரிடமிருந்து வருகிற பந்தை அடிக்க முனையும்போது, பந்தடிக்கும் ஒரு ஆட்டக்காரருக்கு இடையூறு செய்ய அல்லது தடுத்திட, பந்தைப் பிடிப்பவர் முயன்றால். குறிப்பு: பந்து நிலைப்பந்தாகிவிடும். பந்து ஆட்டத்தில் இல்லை. அதாவது ஆடப்படவில்லை (No in Play) என்பதாகிவிடும். பந்தடிக்கும் ஆட்டக்காரர் ஒரு