பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 હોબ્સ மென் பந்தாட்டம் நடுவர் கருதினால், எல்லா தள ஒட்டக்காரர்களையும் ஒரு தளம் நோக்கி முன்னேறிச் செல்ல ஆணையிடுவார். அப்பொழுது பந்து நிலைப்பந்தாகிறது. 3. முரட்டுத்தனமாக எறிந்த பந்தானது, அல்லது பிடிக்கப்படாமல் கடந்து போகின்ற பந்தானது, பின் தடுப்புக்கு (Back Stop) மேலேயோ அலலது கீழேயோ அல்லது உள்ளேயோ சென்றால் அல்லது பின்தடுப்பில் தேங்கி நின்றால். 4. பந்தடி ஆட்டக்காரருக்கு ஒரு தளம் செல்லலாம் என்ற அனுமதி கிடைத்த பிறகு, (முதல் தளத்தில்) நிற்பவர் கட்டாயமாக அந்தத் தளத்தை விட்டுக் கொடுத்துவிட்டு முன்னேறிச் செல்ல வேண்டும். 5. பந்தெறிபவர் (Pitcher) தவறான முறையில் பந்தெறிந்தால். 6. பந்தெறிபவர் எறிந்த பந்தானது (Pitched Ball) பின் தடுப்புக்கு மேலேயோ, உள்ளேயோ அல்லது உட்புறமாகவோ சென்றிருந்தால். குறிப்பு: பந்து நிலைப்பந்தாகிறது. தள ஒட்டக் காரர்கள் தளம் நோக்கி முன்னேறிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 7. பந்தைத் தடுத்தாடுபவர், பந்தடித்தாடுபவர் அடித்த பந்தை அல்லது பிறர் எறிந்த பந்தைத் தடுத்தாடவோ அல்லது பிடித்தாடவோ முயலும்போது, தன்னுடைய தொப்பி, அல்லது கையுறை அல்லது தனது சீருடையின் ஏதாவது ஒரு பகுதியைப் பயன் படுத்தினால்.