பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


чотччо-доч-v "ee vч vw VV., VW, u - II S&c_ | 20 (ت தண்டனை: பந்தடித்தாடுபவர் அடித்த பந்தை தடுத்தாடுபவர் அவ்வாறு நிறுத்தினால் மூன்று தளங்கள் செல்ல தள ஒட்டக்காரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். எறிந்த பந்தாக (Thrown Ball) இருந்தால், அதற்கு இரண்டு தளங்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் தளங்கள் ஒடிட வேண்டுமென்று விரும்பினால், அப்பொழுது தொடப்பட்டால் ஆட்டமிழக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் ஒடிக் கொள்ளலாம். சரியான முறையில் அடிக்கப்பட்ட பந்தை தவறான முறையில் தடுத்து அல்லது தொட்டாடிய தடுத்தாடு பவரை நடுவர் கண்டுகொண்டால், அவ்வாறு அவர் தடுத்தாடியிருக்காவிட்டால், அந்தப் பந்தானது எல்லைவரை சென்றிருக்கும் என்று அவர் உறுதியாக நினைத்தால், அந்த ஒட்டக்காரர் ஒரு ஒட்டம் (Run) எடுத்துவிட (Home Run) அனுமதியளித்துவிடலாம். 8. பந்து விளையாட்டிலிருக்கும்போது, முதல், மூன்றாம் அல்லது அடித்தாடும் தளத்தைத் தாண்டி அதிகப்படியாக வீசியெறிந்து, அப்பந்தானது தவறான ஆடுகளத்தில் தடுக்கப்பட்டால் அல்லது நிறுத்தப் பட்டால். தண்டனை: பந்து நிலைப்பந்தாகிறது. எந்தத் தள ஒட்டக்காரர் மீது விளையாடப்பட்டதோ அவர் தான் ஒடிய தளத்திற்கு மேலே இன்னும் ஒரு தளம் கூட செல்லலாம். மற்ற தள ஒட்டக்காரர்களுக்கும் அதே அளவு தளங்கள் முன்னேற அனுமதிக்கப்படும். 6. தள ஓட்டக்காரரின் முன்னேற்றம் நிறுத்தப்படுதல் 1. சரியாக அடிக்கப்பட்டு பறந்து போகும் பந்தானது நேராக வேலியையோ அல்லது பார்வையாளர்களின்