பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா အြန္ခဲ့ေ 135 3. யாராவது ஒரு தள ஒட்டக்காரரோ அல்லது அடித்தவரோ உள்ளே நுழைந்து இடையூறு செய்ததற்காக வெளியேற்றப்பட்டால், மற்ற தள ஒட்டக்காரர்கள் நடுவரின் தீர்மானப்படி முன்பிருந்த தளங்களுக்கே திரும்பிவர வேண்டும்; 4. தள நடுவரின் உடையோ அல்லது அவரோ பிடிப்பவர் எறிகின்ற பந்தினைத் தடுத்தால்; 5. அடித்தாடுபவரின் உடலின் அல்லது உடையில் எந்த பகுதியாவது வீசியெறிந்த பந்தைத் தொட்டால்; 6. சரியான பந்தானது தடுத்தாடுபவர்கள் தொடு முன்னர் நடுவரின் மீது பட்டுவிட்டால்; 7. அடித்தாடுபவரின் மேல் எறிந்தாடும் பந்து (Pitch) நேராகப் பட்டால்; தண்டனை: 1. பந்து நிலைப்பந்தாகிறது. 2. அடித்தாடுபவர் தள ஆட்டக்காரராக மாறாமலிருந்தால் தவிர, மற்ற தள ஆட்டக்காரர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து தொடப்பட்டால் ஆட்டமிழக்க மாட்டார்கள் என்ற உரிமையுடன் மீண்டும் முன்பிருந்த தளம் நோக்கித் திரும்ப வேண்டும். 3. எல்லா தளங்களிலும் ஆளில்லாமல் இருந்தால் ஒட்டம் எடுக்க முடியாது. 4. தள ஒட்டக்காரர்கள் திரும்ப தங்கள் தளத்திற்கு வரும்போது, இடைப்பட்ட தளங்களைத் தொட வண்டியதில்லை. ஆனால், சரியான முறையில் வரவேண்டும். 5. திரும்ப வந்து சேருவதற்குரிய நேரம் கொடுக்கப் Hட வேண்டியது அவசியமாகும்.