பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 థ్రి மென் பந்தாட்டம் இவ்வாறு எண்ணிக்கையிலும் ஆட்டக்காரர்கள் அதிகமாகிக் கொண்டு போகப் போக, ஆட்டத்திலும் மாற்றங்களும் ஏற்றங்களும் பெருவாரியான அளவில் நிகழ்ந்து, ஆட்டமும் மெருகேறிய வண்ணமாக முன்னேறிக் கொண்டிருந்தது. ஒட்டம் (Run) எடுப்பதற்காக வேகமாக ஓடி வரும் பந்தடி ஆட்டக்காரர்கள், அடிக்கடி முளைக்கம்புகளில் இடித்துக் கொள்ள நேர்ந்ததால், ஏற்படுகின்ற தொந்தரவின் காரணமாக, முளைக்கம்புகள் நீக்கப்பட்டு விட்டன. அந்த இடத்தினை அடையாளம் காட்டு வதற்காக தட்டையான கற்கள் (Flat Stone) தரையில் வைக்கப்பட்டன. பின்னர் அந்தந்த இடங்களில் இரும்புத் தகடுகள் பதிக்கப்பட்டன. கால் பதிக்கும் இடம் கடினமான கற்களாலும் இரும்பாலும் இருப்பதைத் தவிர்த்திட வேண்டும் என்பதற்காக, அதிலும் சற்று மென்மை அமைய வேண்டும் என்பதற்காக, தளப்பைகள் மெத்தை போல வைக்கப்பட்டன. நான்கு தளங்களை (Bases) பிரதானமாக வைத்துக் கொண்டு இந்த ஆட்டம் ஆடப் பெற்றதால் தான், தளப்பந்தாட்டம் (Base Ball) என்று பின்னர் சிறப்புப் பெயர் பெற்றது. அமெரிக்கர்களுக்கிடையே மிகவும் புகழ் பெற்ற ஆட்டமாக தளப்பந்தாட்டம் இடம் பெற்றது. அங்கே உள்நாட்டுப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கூட மக்கள் தளப்பந்தாட்டத்தை ஆடி மகிழ்ந்தனர். அதனை வேடிக்கை பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் மிகுதியாகவே வந்து மகிழ்ந்தது.