பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 థ్రి மென் பந்தாட்டம் போன்ற உணர்வை உண்டாக்கினாலும், ஒரு முறைக்கு இருமுறை மீண்டும் படித்தும், அந்த ஆட்ட சூழ்நிலையை மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியும் நிதானத்துடனும் மீண்டும் படிக்கின்ற பொழுது, தெளிவாகிவிடும். ஆகவே, விதிகளை அவசரப்படாமல், ஆர அமர அமர்ந்து படித்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். மென் பந்தாட்டம் தமிழகப் பள்ளிகளிலும், மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்களாலும் விரும்பி ஆடப் படுகின்ற ஆட்டமாக இருக்கிறது. அவர்கள் மேலும், ஆட்டத்தின் சிறப்பான திறன்களையும் தகுதிகளையும் பெறுவதற்குத் துணையாக அமைந்த இந்நூல், தமிழகத்தில் மென்பந்தாட்டம் மேலும் மலர்ச்சியுற உதவும் என்ற நம்பிக்கையில் கொடுத்திருக்கிறோம். மென் பந்தாட்டத்தின் மென்மையிலும் மேன்மை யிலும் பங்கு பெறும் ஆடும் ஆட்டக்காரர்கள், பல் திறனும் பெருகி, விளையாடி மகிழவும், மற்றவர்களை மகிழ்விக்கவும் வாழ்த்துகிறோம்.

  • ్మe