பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா థ్రి 15 பந்து வேண்டுமே! குத்துச்சண்டை போடும் கையுறையே பந்தாகிவிட்டது. அடித்தாடுகின்ற மட்டையாக விளக்குமாறு இடம் பிடித்துக் கொண்டது. பிறகென்ன? ஆட்டம் 'ஜாம் ஜாம்' என்று தொடங்கிவிட்டது. விளக்குமாற்றின் ஒடிந்த அடிக்கட்டையால் அடித்தாடும் ஆட்டம், அவர்களை மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்த்தியது. இன்பத்துள் ஆழ்த்திய இனிய ஆட்டத்தை இத்துடன் நிறுத்திவிடாமல், மேலும் ஆட வேண்டும் என்று ஆர்வம் கொண்ட அங்கத்தினர்கள் அவரை' அன்புடன் கேட்டுக் கொண்டனர். 'நீங்கள் எல்லோரும் வருகிற சனிக்கிழமை இரவு இங்கே வந்து கூடுங்கள். அதற்குள் ஒரு சில விதி முறைகளையும் வழிகளையும் உருவாக்கி வைத்திருக்கிறேன். தொடர்ந்து ஆடி மகிழ்வோம்” என்று அவர்களை, அவர் மனக்களிப்பூட்டி வழியனுப்பி வைத்தார். ஆனால், மனதில் உருவான ஆசையையும் அதற்கான திட்டத்தையும் வழிஅனுப்பிவிட முடியாமல், சிந்தனையில் ஆழ்ந்து போனார். ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னே அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, வெளிப்புற மைதானத்திலே விளையாடுகின்ற தளப்பந்துக்கு இணையாக, உள்ளாடும் அரங்கத்திலேயும் இதனை ஆடச் செய்யலாம் என்பது தான் அந்த முடிவு. ஆர்வம் ததும்பிட அங்கத்தினர்கள் அனைவரும் சனிக்கிழமையன்று வந்தனர். வந்தவர்கள் இரு குழுவினராகப் பிரிக்கப்பட்டனர். பந்து ஒன்று இருந்தது. ஆனால், அது அளவிலே சற்று பெரியதாக