பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்போர்ட்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ்' எனும் நிறுவனம் முதன் முதலாக வெளியிட்டது. அத்துடன், நகரங்களுக் கிடையே போட்டி ஆட்டங்களை பெருவாரியாக நடத்தவும், அந்தப் பொழுதுபோக்காளர் சங்கம் திட்டங்களைத் தீட்டியது. மக்களிடையே இந்த அமைப்பு முறை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. உள்ளாடும் அரங்கத்தில் ஆடுவதற்குரிய, ஒப்பற்ற ஒர் ஆட்டத்தைத் தேடிக் கொண்டிருந்த மக்களுக்கு, இது தேனாபிஷேகமாக இனித்தது. உள்ளாடும் அரங்கத்திற்கு என்றே உருவாக்கப்பட்ட இந்த ஆட்டத்தைத் திறந்த வெளியிலும் ஆடுவதற்கு ஒரு சிலர் முயன்றனர். என்றாலும் உள்ளாடும் அரங்கமே ஏற்ற இடம் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ளாமல் இல்லை. மென்பந்தாட்டத்தின் பெருமையை பத்திரிகைகள் பாராட்டி மகிழ்ந்தன. வளர்ந்துவரும் இதன் செழிப்பினை உணர்ந்து, பொதுமக்களுக்கு வேண்டிய அளவு நிறைய வசதிகள் செய்து தரவேண்டும் என்ற ஆர்வத்தில், பூங்காக்களில், பொது ஆடுகள மைதானங்களில், பொழுதுபோக்கு மன்றங்களில், சங்கங்களில் எல்லாம் இந்த ஆட்டத்தை ஆடிட ஏற்பாடு செய்தனர் அதிகாரிகள். ஆர்வமுள்ள மக்கள் விரும்பிய நேரமெல்லாம் வியந்து பாராட்டி விளையாடிக் களித்தனர். 'எல்லோரும் ஆடலாம். எளிதான ஆட்டம். இதற்கென்று சிறப்பான திறன் நுணுக்கங்களோ, திறமைகளோ எதுவும் அதிகம் தேவையில்லை. நினைத்த நேரத்திலேயே ஆடவிழைவோர்க்கும் அருமையாக வாய்ப்பைத் தந்து அகம் மகிழ்ந்திடச் செய்கின்ற இனிய