பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா హ్రీ 21 பந்தாட்டக் குழு ஒன்றை ஏற்படுத்தினார். விளையாட்டில் உள்ள வேறுபாடுகளை நுண்ணிதின் ஆராய்ந்து, ஆட்டத்திற்கான சிறந்த விதிமுறைகளை உருவாக்கி, அவற்றையே பின்பற்றி விளையாடுமாறு பொது மக்களைத் துண்டினார். விதிகளை வகுத்தாலும், விளையாட்டில் ஒரமைப்பு முறை வந்தாலும் என்ன பயன். பெயர் ஒன்று நிலையாக இல்லையே! என்ற நினைவில் 1926ஆம் ஆண்டு வால்டேர் ஹேக்கன்சன் (Walter Hakanson) எனும் உடற்கல்வியாளர் மிகத் தீவிரமாக முயன்று, ஒரே பெயர்தான் இதற்கு இருக்க வேண்டும்; அதுவும், மென்பந்தாட்டம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார். 1926ஆம் ஆண்டு கொலரடா எனும் மாகாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், அவர் வற்புறுத்தினாலும், அவரது எண்ணம் உடனே பலித்துப் போய்விடவில்லை. அதே சமயத்தில் பொய்த்துப் போய்விடவும் இல்லை. ஆறு ஆண்டுகள் உடற்கல்வியாளர்கள், விளையாட்டு வல்லுநர்கள் நெஞ்சில் ஆறிப்போகாமல் இந்த நினைவும் பெயரும் ஊறிக் கொண்டேயிருந்ததோ என்னவோ, அந்த வேண்டுகோள் 1932ஆம் ஆண்டு சிகாகோ நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது. வேண்டுகோளின் பெருமையை விளங்கிக் கொண்ட அந்தக் கூட்டத்தினர், மென்பந்தாட்டம் என்ற பெயரே இருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். பெயர் சூட்டியும் விட்டனர். அதுவே இனிய பெயராக அமைந்து எல்லோரும் விரும்பி ஏற்று அழைக்கும் வண்ணம் பரவி நின்றது.