பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா హ్రీ 23 பிடித்தால்தான் அடித்தாடிய ஆட்டக்காரர் ஆட்ட மிழப்பார் என்ற நிலை இல்லை. ஒருமுறை தரையில் வந்து பந்து விழுந்து வருவதைப் பிடித்துவிட்டால் கூட, அடித்தவர் ஆட்டமிழப்பார் என்ற சூழ்நிலையிலும் ஆடப்பட்டது. இதுபோன்ற முறையெல்லாம் ஒரு சில நிகழ்ச்சியினால், ஒரு சிலரின் ஆர்வமான முறைகளினால் மாற்றம் பெற்றுக் கொண்டன. பில்கம்மிங்ஸ் (Bill Cummings) எனும் இளைஞர் மசாசியூசெட் எனும் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஒரு நாள் கரையில் இருந்தவாறு நீர்ப் பரப்பில் ஒட்டாஞ் செல் போன்ற தட்டையான ஒரு பொருளை எடுத்து வீசிக் கொண்டிருந்தபோது, அது தத்தித்தத்தி அழகாகச் செல்வதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறார். அதைப் பார்த்ததும் ஒரு 'புதிய ஞானம் அவருக்குத் தோன்றி விட்டது. இதைப்போலவே, மென்பந்தாட்டத்தில் பந்தெறிந்தால், எப்படியிருக்கும் என்பதுதான் அவரது சிந்தனை, அந்த அளவுக்கு அந்த ஆட்டத்தில் அவர் இலயித்துப் போயிருக்கிறார். இல்லையென்றால் இப்படி ஒரு நினைவலை நீரலையில் பதிந்திருக்கும்போது எப்படி வந்திருக்கும்? பந்து தவழ்ந்து தவழ்ந்து போவதுபோல எறிந்தால் அது எப்படி போகும்? அதை அடித்தாடுபவர் எப்படி எளிதாக அடித்தாடிவிட முடியும் என்பதைத் தனது நண்பர்களிடம் விளக்கிக் கூறிய பொழுது, அவர்கள் அவ்விளைஞனை முட்டாள் என்று தட்டிக் கழித்ததோடு, காணும் இடங்களில் எல்லாம் கேலி செய்யவும் தொடங்கினர். என்றாலும், பில்கம்மிங்ஸ் அந்த