பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா స్ప్రే 25 எதிர்க்குழுவினர், தூரமாய் போய் நின்று கொண்டு, அடித்துவரும் பந்தைப் பிடித்திடத் தயாராக நின்றார்கள். பந்து தன்னிடம் எறியப்பட்டதும் (Pitched) உடனே அதை வேகமாக அடிக்காமல், தான் மட்டையில் பிடித்திருந்த கைப்பிடியை Grip மாற்றிக் கொண்டு, அந்தப் பந்தை அப்படியே தொடுவதுபோல் தொட்டுவிட்டு ஓடினார். பந்து தூரமாகப் போகும் என்று எதிர்பார்த்து நின்றவர்கள் எல்லோரும் ஏமாந்து போனார்கள். அவர் தந்திர ஆட்டத்தைக் கண்டு அயர்ந்தும் போனார்கள். டாமி பார்லோ இதுபோலவே தொடர்ந்து தொட்டாடியே (Bunt) விளையாடத் தொடங்கினார். இந்த ஆட்டமுறை அனைவருக்கும் பிடித்துவிட்டது. அதனால் அவர் ஆடிய Bunt முறை, ஆட்டத்தில் மிக முக்கியமான திறனாக இடம் பெற்றுக் கொண்டது. இடம் பார்த்து அடித்தாடல் (Placing Hit) பந்து வந்தால் முரட்டுத்தனமாக அடித்துவிட்டு, மிக விரைவாகத் தளங்கள் தோறும் ஒடி ஒட்டம் (Run) எடுத்து விடவேண்டும் என்ற நினைவிலே மற்ற ஆட்டக்காரர்கள் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், வில்லி கீலர் (Wille keeler) எனும் ஆட்டக்காரர், ஒரு புதிய ஆட்டமுறையைக் கையாண்டார். அதுவே, அமைதியான ஆட்டமாக அதே சமயத்தில் நிதானம் நிறைந்த புத்திசாலித்தனமான ஆட்டமாகவும் தெரிந்தது. வில்லி கீலர் முரட்டுத்தனமாக அடித்தாடாமல், தடுத்தாடும் ஆட்டக்காரர்கள் இல்லாத இடமாகப் பார்த்து, அந்த இடைவெளியில் (Gap) பந்தை அடித்துவிட்டு,