பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 హ్రీ மென் பந்தாட்டம் முதல் தளம் (First Base) நோக்கி மிக அமைதியாக ஒடி அடைந்துவிடுவாராம். இவ்வாறு ஆடிய முறை எல்லோரின் கருத்திலும் பதிந்துவிட்டது. இடம் பார்த்து அடித்தாடும் இதந்தரும் வழியில் இறங்கி ஆடுதல், ஒரு அரிய திறனாக மாறி, ஆட்டத்தை மறுமலர்ச்சியடையச் செய்தது. முதல் தளத்தில் ஒரு மாறுதல் முதல் தளத்தில் (First Base) நின்று கொண்டிருக்கும் ஒரு ஆட்டக்காரர் அந்தத் தளத்தின் தொடர்பை விட்டுவிட்டு வேறு எங்கும் போய் நிற்கக் கூடாது என்பது முதலில் இருந்த வந்த விதிமுறையாகும். சார்லி காமிஸ்கி (Charlie Comiskey) என்பவர், முதல் தளத்தில் நின்று கொண்டு, பந்தடித்துவிட்டு ஓடிவரும் ஆட்டக்காரரைத் தொட்டு ஆட்டமிழக்கச் செய்வதில் கைதேர்ந்தவர். வல்லவர். அவர் ஆடுகின்றபோது, ஒரு சமயம், ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் தளத்திலே நின்று ஆடிக் கொண்டிருக்கின்ற பொழுது, பந்தடித்தாடுபவர் அடிக்கின்ற பந்தானது, அவருக்குக் கைக்கு எட்டுகின்ற தூரத்திலே பலமுறை வந்து போகிறதென்றாலும், அவரால் தளத்தை விட்டுவிட்டு வந்துப் பந்தைப் பிடிக்க முடியாமல் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் விதியை உணர்ந்து, தனது குழு மேலாளரிடம் போய், வேறு மாதிரியாக ஆட அனுமதி கேட்டார். தளத்தை விட்டுவிட்டு வேறு எந்த இடத்தில் போய் நின்றாலும், எதிராட்டக்காரரைத் தொடும்போது மட்டும் தளத்தைத் தொட்டுக் கொண்டுதான் நிற்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன் அவரும் அனுமதி பெற்று