பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ oசலலையா ૬ઠ્ઠજે. - ஆடினார். இவ்வாறு, ஒரு புதிய விதிமுறை பிறப்பதற்குக் காரணமாக சார்லி காமிஸ்கி இருந்தார். அடிப்பதற்கும் ஒர் அளவு ராய்தாமஸ் என்பவர் பந்தடித்தாடுவதில் நல்ல ஆற்றல் நிறைந்தவர், வேகமாக வருகின்ற பந்தையும் கூர்மையாக உணர்ந்து, வலிமையாக அடித்தாடுகின்ற திறமை மிகுந்தவர். அதனால், தனக்கு நல்ல வகையில் அடிப்பதற்கேற்ப பந்து வருகின்ற வகையில் தவறுகளை (Fouls) இழைத்துக் கொண்டேயிருப்பார். அப்பொழுது அடிக்கும் எண்ணிக்கை (Strike) கைக் கொள்ளப்படாத காலம் அது. ஆகவே, அவர் பந்தெறிய வந்தவர் பொறுமையை சோதிக்கும் தன்மையில், பந்தெறிபவரை எறிய வைத்தவாறு ஆடிக் கொண்டிருப்பார். பந்தெறிபவர் பொறுமை இழந்து போனால், அவர் எறிகின்ற திறனில் குறி குறையும் அல்லவா! அப்பொழுது, அவரும் அவரது குழுவினரும் பந்தை வலிமையாக அடித்தாடி அதிக ஒட்டங்களை (Runs) எடுத்துவிடுவார்கள். அவ்வாறு ராய் தாமஸ் கையாண்ட குறுக்குவழி முறையை ஒழித்துக் கட்டவே, "தவறுகள் (Fault) எவ்வளவு என்பதையும், அடித்தது’ (Strike) எத்தனை என்பதையும் கணக்கிடுகின்ற விதிமுறை ஏற்பட்டது. இவ்வாறாக, ஆட்டம் வளர்ச்சியுறவும், மறுமலர்ச்சி பெறவும் ஆட்டக்காரர்களே பல சமயங்களில் உதவியிருக்கின்றனர். ஆட்ட வல்லுநர்களும் ஆய்ந்து தெளிந்து, நுண்ணிதின் விளங்கி, விதிமுறைகளையும் தெளிவாக ஆக்கித் தந்திருக்கின்றனர். O

  • ్యe