பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 2. தளப் பந்தாட்டமும் மென் பந்தாட்டமும்! தளப் பந்தாட்டத்திலிருந்துதான் மென் பந்தாட்டம் தோன்றியது என்றாலும், மென் பந்தாட்டம் என்றால் ஒரு சிலர் தளப் பந்தாட்டம் என்றே நினைத்துக் குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆட்டத்தின் மையக்கருத்து ஒன்றுதான் என்றாலும், ஆடும் முறைகளில், ஆட்டத்திற்குரிய பொருட்களின் அமைப்புக்களில் சற்று மாறுபாடும் வேறுபாடும் கொண்டதாகவே விளங்கி வருகிறது என்பதை விளக்கவே இந்தப் பகுதி எழுதப்படுகிறது. 1. இரண்டு ஆட்டங்களிலும் நான்கு மூலைகள் (Bases) உண்டு. அதைத் தளம் என்றும் கூறுவார்கள். ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குரிய துரத்தில்தான் வித்தியாசம் இருக்கிறது. தளப் பந்தாட்டத்தில் ஒரு தளத்திற்கும் மற்றொரு தளத்திற்கும் உரிய தூரம் 90 அடியாகும். மென்