பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 ష్ర్ప மென் பந்தாட்டம் 6. பந்தெறிவதிலும் கையைக் கீழாகக் கொண்டு போய்தான் எறிய வேண்டும். பந்தெறிபவர் பந்தெறிவதற்கும், அடிப்பதற்கு இடையிலே ஒரு தரம் ஒடிக் கொள்ளலாம் என்ற விதியும் மென்பந்தாட்டத்தில் உண்டு. வேறுபல விதிமுறைகளில் வேற்றுமைகள் இருந்தாலும், 'ஒட்டம் பெறுவதுதான் தலையாய கொள்கையாகும். தளப் பந்தாட்டம் தாய் விளையாட்டு’ என்றால், மென் பந்தாட்டம் 'சேய் விளையாட்டு’ என்றே அழைக்கப்படலாம். 'தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்று ஒரு பழமொழி உண்டு. அதைப்போலவே தான், தளப் பந்தாட்டம் பெற்ற புகழைவிட மென் பந்தாட்டம் மக்களிடையே பெரும் புகழைப் பெற்று சிறப்பான இடத்தைப் பிடித்துக் கொண்டது. அவ்வளவு சிறப்புக்கும் காரணம், மென்பந்தாட்டத் தினிடையே அமைந்திருந்த அடிப்படைத்திறன் நுணுக்கங்கள்தான். அப்படியென்றால், மென் பந்தாட்டத்திடம் மக்களை மயக்குகின்ற சக்திகள்தான் என்னவாக இருந்தன என்பதனையும் விவரமாகக் காண்போம் வாருங்கள். 1. மென் பந்தாட்டத்திற்கென்று குறைந்த தேவைகள். அதாவது சிறிய ஆடுகளப் பரப்பு. ஒரு அடித்தாடும் மட்டை அவ்வளவு போதும். விருப்பம் போல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விளையாடி மகிழலாம். 2. ஆண், பெண், இளைஞர், முதியோர் என்று பாகுபாடும் வேறுபாடும் வித்தியாசமுமின்றி, விளையாடிக் களிப்பதற்கேற்ற எளிமையான, அதே